விரைவில் திருமணம், தற்கொலை செய்துகொண்ட இளம் நடிகை - முன்னாள் காதலர் காரணமா ?

By Ajju · 17/10/2022

இந்தி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலர் கடன் தொல்லை, மன அழுத்தம், காதல் பிரிவு போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். ஆனால், சிலருடைய தற்கொலைக்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை.

அதிலும் கடந்த சில வருடங்களாகவே நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது இந்தி சீரியல் நடிகை வைசாலி தக்கர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை மற்றும் சசுரல் சிமர் கா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

வைசாலி தக்கர் திரைப்பயணம்:

இந்த சீரியல்களும் மிக பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் கடைசியாக ரக்‌ஷாபந்தன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய கேரியருக்காக மும்பையில் தங்கி இருந்தார். பின் கடந்த ஒரு ஆண்டாக இவர் மும்பையில் இருந்து காலி செய்துவிட்டு இந்தூரில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று திடீரென நடிகை வைஷாலி தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வைசாலி தக்கர் தற்கொலை:

நடிகை வைஷாலியின் அறை ரொம்ப நேரம் ஆகியும் திறக்கப்படாததால் வைஷாலியின் தந்தை சந்தேகமடைந்து கதவை தட்டி இருக்கிறார். இருந்தும் திறக்கவில்லை. பின் கதவை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார். அப்போது தான் மின்விசிறியில் வைசாலி தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தற்கொலை குறித்து வைஷாலியின் தந்தை போலீசிற்கு தகவல் அளித்திருக்கிறார். தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை:

பின் வைசாலி இறந்த அறையை போலீஸ் பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது அந்த அறையில் வைஷாலி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியிருக்கிறார். அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வைஷாலி கடந்த ஆண்டுதான் கென்யாவை சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங் என்பவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

தற்கொலைக்கு காரணம்:

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், கொரோனா காரணமாக இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தற்போது இவர் திடீரென தற்கொலை செய்திருப்பது பேர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட இவர் கடைசியாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் காதலின் சித்திரவதை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு நடிகை தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full