மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதால் காயத்திரி ரகுராம் மீது சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயத்திரி தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பின் இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும்,இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement

அரசியலில் காயத்ரி ரகுராம்:

பின் இவர் அரசியலில் குதித்தார். பல ஆண்டுக்கு முன்னரே காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக, காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:

அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. சமீபத்தில் நடந்த சூர்யா மற்றும் டெய்ஸி ஆபாச சர்ச்சை விவகாரம் பற்றி காயதிரி ரகுராம் போட்டிருந்த பதிவினால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

அண்ணாமலையை விமர்சிக்கும் காயத்ரி ரகுராம்:

இதனால் தான் காயத்ரியை கட்சியில் இருந்து ஆறு மாதம் வரை மாநில தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்திருந்தார். இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பின் கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தினமும் டீவ்ட் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

காயத்ரி ரகுராம் மீது புகார்:

அதாவது, காயத்ரி ரகுராம் பாஜகவை விட்டு விலகியதில் இருந்து மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார். வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் காயத்ரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜி எஸ் மணி புகார் அளித்திருக்கிறார். இவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement