சமீபத்தில் யூடுயூபில் பெண்களை ஆபாசமாக பேசியதர்க்காக பிரபல பப்ஜி ஸ்ட்ரீமர் பப்ஜி மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்ஜி மதன் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து யூடுயூபில் ஆபாசமாக பேசும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர்.

Advertisement

அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து மற்றும் சிலர் மீது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தாளாளர் முகைதீன் இப்ராகிம், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி இளைஞர்களை அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் உள்பட பலர் வீடியோ பதிவேற்றுகிறார்கள். இவர்களது உடல்பாவனை, பேச்சு கலாசாரம், சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. சிறுவர், சிறுமிகளின் மனம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய இணைய தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும். ஆபாச பேர்வழிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஆனால், ஜி பி முத்துவிற்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பியுள்ளனர். 3ஆவது வரைக்கும் படித்தவர்.10வயதில் வேலைக்கு சென்று சம்பாரிக்க ஆரம்பித்து28ஆவது வயதில் தனியாக தொழில் (Carpenter) ஆரம்பித்தார்.அண்ணன் தம்பி சண்டையில் 136தையல் போடும் நிலைக்கு சென்றார். ஒரு விபத்தில் தம்பியை இழந்தார்.தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்க ஆரம்பித்தார்.அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார். தனது 35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்.இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார்.

Advertisement

அதில் அடிமையாயகவும் மாறினார். ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பொழப்பு என்றும் இருந்தார்.குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார்.உலகம் முழுக்க பிரபலம் ஆனார். தற்போது ஆதித்யா நகைச்சுவை சேனலில் வேலை வாய்ப்பு வந்துள்ளது. சமீபத்தில் தான் ஐ20 கார் ஒன்று வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement