ஹாப்பி ஸ்ட்ரீட்ல் பழக்கம், கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய முன்னாள் ஜீ தமிழ் பாடகர்- இளம் பெண் அளித்த புகாரில் கைது
பிரபல டிவி சேனல் பாடகர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பாடகராக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் குருகுகன். இவர் மூன்றாவது சீசனில் பங்கேற்று இருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் பாடகர் குருகுகன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த இளம் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு 30 வயது ஆகிறது. இவர் மகளிர் காவல் நிலையத்தில் பாடகர் குருகுகன் மீது அளித்த புகாரில், கடந்த மே மாதம் சென்னையில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் இசை நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன்.
பாடகர் மீது புகார்:
இந்த இசை நிகழ்ச்சியில் மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் பாடகர் குருகுகன் என்பவர் அறிமுகமானார் இவர் தனியார் டிவி இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். பின் இவர் என்னுடைய மொபைல் போன் நம்பரை வாங்கி முதலில் நட்பாக தான் பேசி வந்தார். பின் தனக்கு வீட்டில் திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லி, உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டார்.
தனியார் டிவி பாடகர் மீது பாலியல் புகார்.!#Chennai #Harassment #Singer #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/sZ3PRdlVo3
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) November 18, 2024
புகாரில் சொன்னது:
உடனே நான், உங்களை விட 5 வயது பெரியவள் என்று சொன்னேன். ஆனால், அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். பின் நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இதெல்லாம் ஓத்து வராது என்று மறுப்பு தெரிவித்தேன். அதற்கு அவர், எனக்கு ஜாதி எல்லாம் பிரச்சனை இல்லை என்று என்னுடைய வீட்டிற்கு வந்து பெற்றோரிடமே பெண் கேட்டார். என்னுடைய பெற்றோர்களுமே நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது என் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
குருகுகன் செய்த வேலை:
இருந்தாலும், அவர் தொடர்ந்து என்னை திருமண ஆசை காட்டிக்கொண்டே வந்திருந்தார். பின் எனக்கு உடல்நிலை குறைவு காரணமாக நான் ஜூலை மாதம் என்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது நான் மட்டும்தான் அங்கு இருந்தேன். இதை அறிந்த அவர் என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருந்தார். பின் அவர் என்னை பதிவு திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பலமுறை என்னிடம் நெருக்கமாக இருந்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீஸ்:
இதனால் நான் கர்ப்பமானேன். மேலும், இது எங்கள் வீட்டிற்கு தெரிந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டாயக் கரு கலைப்பு செய்ய வைத்தார். தற்போது ஜாதியை காரணமாக காட்டி திருமணம் செய்ய மறுத்து வருகிறார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து போலீஸ், பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது போன்ற பல பிரிவுகளின் கீழ் குருகுகன் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள்.