திருமணம் ஆகும் போது எனக்கு 45 ஆனா அவளுக்கு பிரபல நடிகர் ராஜசேகர் ஷேரிங்.

By subhashini · 30/9/2023

பழம்பெரும் நடிகர் ராஜசேகர்- திலகம் தம்பதியின் மலரும் நினைவுகள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்தவர்கள் ராஜசேகர்- திலகம். ராஜசேகர் முதலில் மேடைநாடகங்கள் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்குப் பின் சினிமா, சீரியல் என்று நடித்திருந்தார். அதே போலவே அவருடைய மனைவி திலகமும் படங்களில் நடித்து, சின்னத்திரையில் நடித்திருந்தார். இருவரும் வயது முதுமை காரணமாக சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

சமீபத்தில் தான் இவர்களுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் ராஜசேகர்- திலகம் தம்பதியினர் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது நான் எதார்த்தமாகத் தான் சினிமாவுக்கு வந்தேன். 1962 ல் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் வேலைக்காக தான் சென்னைக்கு வந்தேன்.

ராஜசேகர்- திலகம் தம்பதி பேட்டி:

என்னுடன் வேலை செய்த நண்பர்கள் தான், நீ அழகாக இருக்கிறாய், திரைத்துறையில் நடிக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் சொல்லி தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. அதே சமயம் என்னுடைய நண்பர் எஸ் ஏ அசோகன் டிராமா ட்ரூப்பில் இருந்தார். அவர் மூலம் தான் நானும் ட்ராமா ட்ரூப்பில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு சில ட்ரூப்பில் மாறி நடித்தேன். நான் நடித்த பெரும்பாலான டிராமாக்கள் படமாகி வெளியாகியிருந்தது. இதனால் நான் டிராமாவில் பல விருதுகள் வாங்கி இருந்தேன். அதற்குப் பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. வேலை பார்த்துக் கொண்டே படங்களில் நடித்ததால், என்னால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை.

திரைஅனுபவம்:

இதுவரை நான் என்பது படங்கள், 300க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதேபோல் என்னுடைய மனைவி திலகம் 15, 16 வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து விட்டார். ட்ராமாவில் நடித்து கொண்டே படங்களிலும் டான்ஸ் செய்திருந்தார். அதற்கு பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரெண்டு, மூணு படங்களில் அவர் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்களெல்லாம் பெருசாக மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. அதற்கு பிறகு தான் இவர் அம்மா கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி என்று எல்லா நடிகர்களோடு நடித்திருந்தார்.

ராஜசேகர் - திலகம் எண்பதாவது கல்யாணம்:

என்னுடைய நண்பன் அசோகன் மூலமாகத் தான் எம்ஜிஆரை சந்தித்தேன். அவர் என்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு நான் சேகர் என்று சொன்னதும், ராஜசேகரா என்று கேட்டார். அதனால் தான் என்னுடைய பெயர் அன்று முதல் இன்று வரை ராஜசேகர் என்று மாறியது. மேலும், எங்களுடையது காதல் திருமணம். டிராமா ட்ரூப்பில் தான் நாங்கள் இருவரும் சந்தித்தோம். இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவருக்கு பிடித்து விட்டது. ஆனால், குடும்ப பிரச்சினை ரொம்ப பெரிதாக இருந்தது. அதனால் தான் எங்களுடைய திருமணம் தாமதமாக நடந்தது .

https://www.youtube.com/watch?v=blJr1UXSJwI

தம்பதியின் அழகிய நினைவுகள்:

20 வருடங்களுக்கு மேலாக நாங்கள் காதலித்தோம். எனக்கு 45 அவளுக்கு 43 அப்பதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இன்றும் எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் தான் எங்களை, எண்பதாவது கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு குழந்தை இல்லை.
அதனால் நாங்கள் வருத்தப்பட்டதும் இல்லை. எனக்கு நீ குழந்தை, உனக்கு நான் குழந்தை என்று நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வாழ்ந்து வருகிறோம். நடிப்புக்கு ஓய்வே கிடையாது. இப்பவும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் இரண்டு பேருமே நடிக்க தயாராக இருக்கின்றோம் என்று சந்தோஷமாக புன்னகை முகத்துடன் பேசி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full