நாக சைதன்யா- சோபிதா திருமண கொண்டாட்டத்தில் எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்கிறார்கள் தெரியுமா? - பட்டியல் இதோ

By krithika · 4/12/2024

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக தென்னிந்திய என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள்.

திருமணம் குறித்த வதந்தி:

அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதோடு நாக கொள்ள சோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதுவும் 50 கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் நாக சைதன்யா, திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக வதந்திகள் வருகிறது. ஆனால் அது எதுவும் உண்மை கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

நாக சைதன்யா- சோபிதா திருமணம்:

இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 4ஆம்) நடைபெற இருக்கிறது. இந்த திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில், அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைத்துள்ளார்களாம்.

திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள்:

தற்போது இந்த திருமணத்தில் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற பட்டியல் தான் வெளியாகி இருக்கிறது. அதில், நாக சைதன்யா மற்றும் சோபித்த குடும்பத்தினர் மற்றும் ராணா ரகுபதி குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களாம். மேலும், ராஜா மௌலி, சுகுமார் போன்ற திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு பிரபல நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் குடும்பத்துடன் திருமணத்தில் பங்கேற்க இருக்கிறார்கள் என தெரிய வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full