இந்த குப்பைத்தொட்டிக்கு (பிக் பாஸ்) ஏன் வந்தீங்க, உங்க மரியாதையே போச்சு - கமல் குறித்து பிரபலத்தின் ஆதங்கம்.

By subhashini · 13/11/2023

கமலுடைய மரியாதையே போச்சு என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.
ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

பிரதீப் குறித்த சர்ச்சை:

அதோடு இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் பிற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள். இதனால் சில பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் அவரை கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள்.

https://www.youtube.com/shorts/mO0fBfdsrLE

நிகழ்ச்சியில் கமல்:

இதனை அடுத்து சனிக்கிழமை எபிசோடில் கூட மாயா, பூர்ணிமா, ஜோதிகா, ஐசுவை பார்த்து கமல், நீங்கள் வைத்த குற்றசாட்டுகள் எல்லாம் உண்மை தானா? நான் ரெட் கார்ட் கொடுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் உங்களிடம் தான் இருந்தது. நீங்கள் நினைத்திருந்தால் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் என்று இன்று சாரா மாறியாக கமல் வெளுத்து வாங்கி இருந்தார். இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

வலைப்பேச்சு அந்தணன் வீடியோ:

அதில் அவர், திருவாருர் தேர் திருவல்லிக்கேணி சந்துக்குள் வந்தால் என்ன ஆகுமோ? அதுதான் கமலஹாசனின் நிலைமையாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கமல் ஒரு மகா நடிகன், மிகப்பெரிய சாதனையாளர் என்பதை எல்லாத்தையும் மறந்துவிட்டு ரொம்ப சாதாரணமாக அவரிடம் நடந்து கொள்கிறார்கள். பிரதீப் வெளியே அனுப்பப்பட்டது குறித்து கமல் பல விளக்கம் கொடுத்து இருந்தார். இருந்தாலும், நெட்டிசன்களுக்கு அவர் மீதான கோவம் போகவில்லை.

https://www.youtube.com/watch?v=R4iKOKYMiWY

கமல் குறித்து சொன்னது:

வீட்டில் மோசமாக நடந்து கொண்ட மாயாவை வெளியேற்றாமல் கமல் சமாளிப்பதற்கு காரணம், மாயா விக்ரம் படத்தில் நடித்தவர் என்றும், அவருக்கும் கமலுக்கும் ஒரு நெருக்கம் இருக்கு என்றும் இணையத்தில் வதந்தியை பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, இவ்வளவு பெரிய சாதனையாளர் நீங்க எதுக்கு இந்த குப்பை தொட்டிக்கு வந்தீங்க, உங்களுடைய மரியாதையை நீங்க காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பணம் தான் முக்கியம் என்றால், அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், உங்களுடைய மரியாதையை நீங்கள் ஏன் இழக்கிறீர்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full