தணிக்கைச் சான்றிதழ் தாமதம் முதல் நீதிமன்றம் தீர்ப்பு வரை - 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் விவகாரம்

By subhashini · 9/1/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஜனநாயகன் பட ரிலீஸ்:

மேலும், படத்திற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடந்த மாதமே தணிக்கைக்காக படக்குழு அனுப்பி இருந்தது. அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை குழு படத்தை பார்த்தது சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மீட் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதற்கு பிறகு தணிக்கை குழு உறுப்பினர்கள் சொன்ன மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தணிக்கை குழுக்கே அனுப்பி இருந்தது. இருந்தாலுமே படத்துக்கான தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

https://www.youtube.com/watch?v=a5oqmbg7Jes

நீதிமன்றம் விசாரணை:

படம் வெளியாக ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தணிக்கை சான்று
கிடைக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. வழக்கின் விசாரணையின் போது நீதிபதி, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம் பெற்றவர்
புகார் அளிப்பது ஏற்கத்தக்கதுதானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யூ/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எல்லாம் கேட்டிருந்தார்கள். தணிக்கை குழுவில் 5 நபர்களில் நான்கு பேர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

படத்தின் ரிலீஸ் சிக்கல்:

ஒருவர் மட்டும் தான் ஆட்சபனை தெரிவித்து இருக்கிறார். அதோடு மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார். இன்று விசாரித்த நீதிபதி, விஜயின் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இதை அடுத்து படம் ஜனவரி 11, 12 தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது.
மீண்டும் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full