சூர்யா 37 படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்..! யார் தெரியுமா.? புகைப்படம் இதோ.!
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கம் 'என் ஜி கே' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வனமகன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த நடித்து வருகிறார்.
[caption id="attachment_24332" align="aligncenter" width="500"] Chirg Jani[/caption]
மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், இந்தி திரைப்பட நடிகருமான சிரக் ஜானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை 'சூர்யா 37 ' படத்தின் இயக்குனர் கே வி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இந்தி நடிகர் போமன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.. இவர் இந்தியில் 3 இடியட்ஸ் படத்தில் “வைரஸ்” கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு இந்தி நடிகரான சிரக் ஜானி இணைந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் தமிழ் படம் என்பதும் குறிப்படத்தக்கது.