சன் மியூஸிக் Vjவுடன் திடீர் திருமணம், இரட்டை குழந்தைகள் - Twinsகளின் முகத்தை முதன் முறையாக காட்டிய சந்திரலேகா சீரியல் நடிகை.

By Arun · 17/11/2023

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணத்தை முடித்த நிலையில் தற்போது சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை முத்த முறையாக பகிர்ந்துள்ளார். பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சந்திரலேகா சீரியல் பெரும் ஹிட் அடித்தது.

இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து இருந்தது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருந்தார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

இந்த சீரியல் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. இவர் ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக ஸ்வேதா நடித்திருந்தார்.

முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி சத்யா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது பாரதிதான்.ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் சினிமாவில் வாய்ப்பு குறையவே 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ செம்பருத்தி சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இவர் திருமணம் செய்துகொண்ட நபர் வேறு யாரும் இல்லை சன் மியூசிக் தொலைக்காட்சியில் vjவாக இருந்த மால் முருகனை தான். திருமணம் முடிந்த சில மாதங்களில் கர்ப்பமாக இருந்த ஸ்வேதாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள்(ஒரு ஆண், ஒரு பெண்) பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருந்தனர். மகனுக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் மகளுக்கு

behindtalkies AMP · Quick view
View full