கடந்த டிசம்பரில் சன் மியூசிக் பிரபலத்துடன் திருமணம் - தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை.

By Arun · 18/5/2023

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணத்தை முடித்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் சந்திரலேகா சீரியல் நடிகை. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சந்திரலேகா சீரியல் பெரும் ஹிட் அடித்தது.

இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து இருந்தது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருந்தார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

இந்த சீரியல் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. இவர் ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக ஸ்வேதா நடித்திருந்தார்.

முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி சத்யா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது பாரதிதான்.ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் சினிமாவில் வாய்ப்பு குறையவே 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ செம்பருத்தி சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

தான் திருமணம் செய்து கொள்ளும் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்தேன் என்றுகூறி இருந்தார். . இவர் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை யார் என்று பலரும் எதிர் பார்த்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இவர் சன் மியூசிக் தொகுப்பாளர் மால் முருகனை மணமுடித்தார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கும் ஸ்வேதா தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full