மற்ற நடிகர்களின் விஷயத்தில் வடிவேலுவின் உண்மை முகம், விவேக் இறப்பிற்கு செல்லாத காரணம் - பல உண்மைகளை உடைத்த சாப்ளின் பாபு.
சமீபத்தில் துணை காமெடி நடிகர் சாப்ளின் பாபு அவர்கள் அளித்த பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது யோகி பாபு, சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. இப்படி எல்லா காலகட்டங்களிலும் பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு போன்றவர்கள் பல உண்டு.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்த, சாப்ளின் பாலுவும் ஒருவர். இவர் பெண்ணின் மனதை தொட்டு, ஷாஜகான், மிட்டா மிராசு,ஸ்டைல், சிவகாசி, ராஜா என நிறைய படங்களில் நடித்துள்ள இவர், நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில் சாப்ளின் பாலு, நான் ஒரு நாளைக்கு ரூ.25 சம்பளத்தில் தொடங்கி பின் ரூ.50 , ரூ.75 என முன்னேறி கில்லி படத்தின் போது தான் ஓரளவு அதிகமாகவே வாங்கினேன் என்றார்.
கில்லி படம் குறித்து :
அந்தப் படத்தில் அவர் இருக்க காரணம் இயக்குனர் தரணியும், தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினமும் தான் என்றவர், கில்லி படத்தில் ரீலீஸ் கொண்டாட்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றார். அந்தப் படத்தின் படப்பிடிப்பை தன்னால் மறக்க முடியாது என்றும் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினத்திற்கு படத்தின் வெற்றியில் பெரிய பங்கு உண்டு என்றார். அந்த படத்தின் வெற்றி மற்றும் ரீ ரிலீஸில் ரூ. 30 கோடி வசூலுக்கான காரணம் விஜய் மற்றும் படர் குழுவினர் அனைவரும் தான் என்று பெருமையோடு கூறியிருந்தார்.
https://youtu.be/5_rdeWc2TwA?si=Jn-QEP6Vf5HQzhzt
விவேக் மற்றும் கவுண்டமணி குறித்து :
மேலும், நடிகர் விவேக் தனக்கு கடவுள் மாதிரி என்றும், அவர் இறந்தபோது கூட போகவில்லை, அந்த பலம் எனக்கு இல்லை என்று சாப்ளின் பாபு கூறினார். அவருடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்ததாகவும், குறிப்பாக பெண்ணின் மனதை தொட்டு படத்தில் சப்ளை பாபு, விவேக், மயில்சாமி ஆகியோர் நடித்த அந்த காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்றும் கண்களில் கண்ணீரோடு பகிர்ந்தார் சாப்ளின். அதனைத் தொடர்ந்து சாப்ளின் பாபு, நான் நிறைய காமெடி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எனக்கு கவுண்டமணி ரொம்ப பிடிக்கும் என்றார். கவுண்டமணி எப்போதும் யாரையும் போட்டியாக நினைக்க மாட்டார் என்றும், அவருக்கு அவரையே போட்டியாக நினைப்பார் என்றும் கூறினார்.
திருமண வாழ்க்கை :
மேலும் நான் பத்து ஆண்டுகளாக மன உளைச்சலால் கஷ்டப்பட்டேன் என்றார். பின்பு தனது மன வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்த அவர், நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டேன் என்றார். தனது மகளுக்கு மின்சார கண்ணா படத்தின் போது நடிகர் விஜய் தான் வானதி என்று பெயர் வைத்தார் என்றும், பின்பு நான் ஜெயவானதி என்று திருத்திக் கொண்டேன் என்றார்.
வடிவேலு குறித்து :
பின்பு நடிகர் வடிவேல் பற்றி கூறுகையில், அவர் மற்ற நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள விஷியத்தில் தலையிடுவார் என்றும், அவர் பீக்கில் வருவதற்கு முன்னாடியே நான் வெளியே வந்துட்டேன் என்றார். நான் மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், அதில் விஜய்யுடன் மட்டும் 15 படங்கள் இருக்கும் என்று சாப்ளின் பாலு பெருமையோடு கூறியிருந்தார்.