உன் முன்னாடியே சொல்றேன்டி 'அர்னவ் ஐ லவ் யூடா உம்மா' - அர்னவ் மனிவியிடமே பேசியுள்ள செல்லம்மா சீரியல் நடிகை.

By Siva · 12/10/2022

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்து இருக்கிறார் அர்னவ். இஸ்லாம் மதத்தை சேர்ந்த அர்னவ், திவ்யாவை மதம் மாறினால் தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருக்கிறார். இதனால் திவ்யாவும் மதம் மாறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்று ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் அருணாவிற்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதால்அர்னவ் மீது நம்பிக்கை இழந்த திவ்யா தன்னை ஊரறிய திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார்.

போலீசில் புகார் :

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை ஊரறிய திருமணம் செய்திருந்தார் அர்னவ், திருமணம் முடிந்து சில வாரங்களில் திவ்யா கர்ப்பமாகி இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு கூட நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அர்னவ், திவ்யாவை பிரிந்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திவ்யா, அர்னவ் தன்னை தள்ளிவிட்டதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்ததால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாக கூறி இருந்தார்.

மேலும், செல்லம்மா தொடரில் கமிட் ஆன போது ஆஷிதா என்பவருடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த பெண்ணுடன் அவன் தொடர்பில் இருக்கிறான். அந்த பெண்ணிற்கும் அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியும். ஒரு நாள் நான் ஷூட்டிங்கிற்கு போன போது அவன் அசிஸ்டன்ட் எல்லாரும் வெளிய இருந்தாங்க உள்ள அவங்க ரெண்டு பெரும் தனியா இருந்தாங்க அப்போ என் கண் முன்னாடியே அவ என் கணவனை கிஸ் கொடுத்தா.

டேமேஜ் ஆகும் செல்லம்மா பெயர் :

அவன் பெண்ணுடன் பழகுவதை நான் கேட்ட போது அவன் என்னிடம் சண்டையிடான். அதற்கு பயந்து தான் நான் திருமண புகைப்படம், வளைகாப்பு புகைப்படம் எல்லாத்தையும் போட்டேன். அதை நீக்க சொல்லி சண்டையிட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், ஹன்சிதாவிற்கும் எனக்கும் எந்த ஒரு தப்பான உறவும் இல்லை என்று அர்னவ் கூறி இருந்தார். இது குறித்து ஹன்சிதாவும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட Privateல் போட்டு வைத்து இருக்கிறார் ஹன்ஸிதா.

https://www.youtube.com/watch?v=-jk5Psftlsw&t=179s

'ஐ லவ் யூ' சொன்ன ஹன்ஷிகா :

இப்படி ஒரு நிலையில் அர்னவ், திவ்யா, ஹன்ஷிகா மூவரும் கான்பரசன்ஸ் காலில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தன் கணவருடன் நெருங்கி பழகும் ஹன்ஷிதாவை திவ்யா கேள்வி கேட்ட அதற்கு ஹன்ஷிகா 'நீ என் கையில கிடைச்ச அப்படியே உன்னை வெட்டி நாய்க்கு போடுவேன் எதுக்கு நீ எல்லாம் இந்த உலகத்துல வாழுற என்று ஹன்சிகா பேச அதற்கு திவ்யா, நீ ஏன் என் புருஷனுக்கு ஐ லவ் யூ சொல்ற என்று கேட்க அதற்கு ஹன்ஷிகா 'இப்பயும் சொல்றேன், அர்னவ் ஐ லவ் யூ டா உம்மா' என்று பேசி இருக்கிறார். இந்த ஆடியோவை கேட்ட பலரும் செல்லம்மா என்னம்மா இதெல்லாம் என்று புலம்பி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full