ஷூட்டிங்கில் உண்மையாகவே அடிச்சாங்க, சாணி ஊத்துனாங்க - சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்னு மெனன் எமோஷனல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கதாநாயகி கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதனாலே, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள்.
இந்தத் தொடரில் கேப்ரில்லா, கிருஷ்ணா, ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா, பேபி அஹானா, லிதன்யா சபாலன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த சீரியலில் ஹீரோ- வில்லனாக நடித்து கலக்கியிருந்தவர் ஜிஷ்ணு மேனன். இந்த சீரியலின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர். தற்போது ஜிஷ்ணு அவர்கள் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி இருக்கும் செல்லமே செல்லமே என்ற தொடரில் ஹீரோவாக இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்கிறார்.
ஜிஷ்ணு மேனன் குறித்த தகவல்:
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ரோலில் தான் ஜிஷ்ணு நடிக்கிறார். இருந்தாலும் இவருக்கு இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஜிஷ்ணு மேனன், சுந்தரி சீரியலுக்கு பிறகு எனக்கு மறுபடியும் பிரேக் கிடைக்குமா? என்று
யோசனைகள் அதிகமாக இருந்தது. ஆனால், செல்லமே செல்லமே மீண்டும் எனக்கு ஒரு பிரேக் தந்திருக்கு என்று சொல்லலாம். முதல் நாளில் நான் இந்த கதை லவ் ஸ்டோரி மாதிரி தான் போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த சீரியல் ஆன்லைன் சொல்லும் போதே உங்களுக்கு ஜோடி கிடையாது.
ஜிஷ்ணு மேனன் பேட்டி:
உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. உங்களுக்கு ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு தான் கதையை விரிவாக சொன்னார்கள். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரணம் இந்த கதையில் என்னுடைய நடிப்பை இன்னும் நல்லா வெளிப்படுத்த முடியும் என்று தோன்றியது. ரேஷ்மா முரளிதரனை இந்த சீரியலுக்கு பிறகு தான் எனக்கு தெரியும். அதற்கு முன்னாடி அவர்களுடைய பேட்டிகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு இவர்கள் ரொம்ப ஆட்டிட்யூட் என்று நினைத்திருந்தேன்.
சீரியல் அனுபவம்:
உண்மையில் அவர்கள் அப்படியெல்லாம் இல்லை, ரொம்பவே ஸ்வீட். எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அவர்கள் உடனடியாக அதை எடுத்துக் கொள்வார்கள். பிறகு இதன்யா, சிவபாலன் இந்த சீரியலில் என்னுடன் இணைந்து நடிக்கிறார்கள். நான் இதுவரைக்கும் பிமேல் ஓரியண்டட் சீரியலில் தான் நடித்திருக்கிறேன்.
அதனால் எனக்கு பிரச்சனையும் கிடையாது. இது பிமேல் ஓரியன்டட் கதை என்று நினைத்துக் கொண்டு நான் என்னுடைய வேலையை முழுமையாக பார்க்காமல் இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. சுந்தரி சீரியலில் ஒரு காட்சியில் என்னை உண்மையாகவே என்னை அடித்தார்கள். ஒரு காட்சியில் சாணியில் அடித்தார்கள். அப்போ வலித்தது தான். ஆனால் அந்த கேரக்டருக்கு தான் அது தேவையானது. இந்த சீரியலிலும் என்னுடைய முழு உழைப்பை கொடுப்பேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.