முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி இருக்கும் திரையரங்குகள் வருமானம் இல்லாததால் இழுத்து மூடப்பட்ட பல கதைகளை நான் கேட்டிருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் கிராமப்புறங்களில் இருக்கும் டென்ட் கொட்டக்களும் அல்லது சில சிறு நகர புறங்களில் தான் நடைபெறும். ஆனால், சென்னையை போன்ற பெரு நகரில் இருக்கும் திரையரங்கம் ஒன்று மூடப்பட்டுள்ள சம்பவம் சென்னை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்துயுள்ளது.

சென்னை வட பழனியில் உள்ள ஏ வி எம் ஸ்டூடியோவிற்கு மிக அருகில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரபலமான திரையரங்கமாக விளங்கி வருகிறது. வட பழனியில் உள்ள பலரின் பிரதான திரையரங்காக இது விளங்கி வந்தது. தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்த நிலையில் இன்றும் பழமை மாறாமல் இருந்து வந்தது இந்த திரையரங்கம்.

Advertisement

இருப்பினும் குளிர் சாதன வசதியுடன் இருந்து வந்த போதிலும் இந்த திரையரங்கில் குறைவான கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. வடபழனியை சுற்றி சுற்றி எத்தனையோ மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் இருந்து வந்தாலும் நடுத்தர மக்களின் பிரதான திரையரங்காக திகழ்ந்து வந்த இந்த திரையரங்கம் திடீரென்று முழுமையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், புதுப்படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டும் தான் தியேட்டரில் கூட்டம் கூடும் ஆனால் மற்ற நாட்களில் 20 – 30 பேர் மட்டும்தான் படம் பார்க்க வருவார்கள். இதனால் தியேட்டருக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை .சொந்த காசை போட்டு படத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் தியேட்டரை மூட கடந்த மார்ச் மாதமே முடிவெடுத்து விட்டதாககூறப்படுகிறது . 50 வது ஆண்டை கடந்த நிலையில் இந்த திரையரங்கம் தனது மூடு விழாவை அறிவித்துள்ளது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்விட்டரில் இந்த திரையரங்கம் மூடபட்டதையொட்டி பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement