வெற்றியின் 'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெற்றி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சென்னை பைல்ஸ் முதல் பக்கம். இந்த படத்தை இயக்குனர் அனீஸ் அஸ்ரப் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சின்னத்தம்பி ப்ரோடக்சன் தயாரித்திருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
மதுரையில் குற்றப் புலனாய்வு தொடர்பான நாவலை எழுதி பிரபலமான எழுத்தாளராக இருப்பவர் ஜீவன் குமார். இவருடைய வாரிசு தான் ஹீரோ வெற்றி. இவருடைய தந்தையை பற்றி பத்திரிகையாளர் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் 'மனிதம்' என்ற பெயரில் அச்சு ஊடகத்திற்கு ஒரு வாரத்திற்கு தொடர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதற்காக ஹீரோ வெற்றியை, ஷில்பா சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
இந்த நேரத்தில் சென்னையில் காவல் அதிகாரியாக தம்பி ராமையா பணியாற்றி வருகிறார்.
இந்த நேரத்தில் தான் தமிழகத்தினுடைய வெவ்வேறு பகுதிகளில் பாடசாலையில் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்படும் தகவல் வெளியாகிறது. இதை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதற்காக தம்பி ராமையா தலைமையில் ஒரு குழு ஏற்பாடு செய்கிறார்கள். அவருக்கு உதவியாக ஹீரோ வெற்றி செல்கிறார்.
துப்பு துலக்குவதில் நிபுணராக ஹீரோ வெற்றி இருக்கிறார். இவர் இந்த கொலை தொடர்பான தடையங்களை சேகரித்து காவல்துறைக்கு கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவுகிறார். அந்த வகையில் இந்த வழக்கு சம்பவமாக போலீஸ் மகேஷ் தாஸ் என்ற குற்றவாளியை பிடிக்கிறார்கள். இதற்கிடையில் ராமையாவின் மகள் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ராமையா ரொம்பவே மனமடைந்து விடுகிறார்.
அந்த தற்கொலைக்கான காரணத்தை வெற்றியிடம் தம்பி ராமையா சொல்கிறார். அதற்குப்பின் குற்றவாளிகளை வெற்றி கண்டுபிடிக்கிறார். குற்றவாளிக்கு ராமையா தண்டனை வாங்கி தந்தாரா? இல்லையா? எதற்காக இந்த குற்றங்களை செய்கிறார்கள்? இதற்குப் பின்னணி என்ன? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்களோட தேர்வுமே சிறப்பாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார்.
ஹீரோ வெற்றி நடிப்பு அசத்தல். முதல் பாதி விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன என்று பரபரப்பாகவும் கதை செல்கிறது. இரண்டாம் பாதியில் வழக்கமான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கதை என்பதால் கொஞ்சம் இயக்குனர் சுதப்பி இருக்கிறார். வில்லனாக வரும் மகேஸ் நன்றாக நடித்து இருக்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காமெடி காட்சிகளுமே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஹீரோயினி ஷில்பா மஞ்சுநாத் பத்திரிக்கையாளராக கச்சிதமாக சிறப்பாக செய்திருக்கிறார்.
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கிரைம் திரில்லர் பாணியில் தான் இயக்குனர் நகர்த்தி சென்றிருக்கிறார். இருந்தாலும் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் சென்னை பைல்ஸ் முதல் பக்கம் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை ஒளிப்பதிவு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
முதல் பாதி அருமை
குறை:
சில இடங்களில் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைவு
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் சென்னை பைல்ஸ் முதல் பக்கம் - தேடல்