'ஜகஜால கில்லாடி' பட விவகாரம்: சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் இதோ
சிவாஜி கணேசனுடைய வீட்டை ஜப்தி செய்ய சொல்லி உயர் நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அவருடைய பெயர் உலகெங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மேலும், சிவாஜிகணேசன் உடைய பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர்
சேர்ந்து ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜகஜால கில்லாடி பட விவகாரம்:
இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ஈசன் ப்ரொடக்ஷன் 3 கோடி 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி இருந்தார்கள். இந்த கடனுக்காக ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி தருவதாகவும் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். ஆனால், அதன்படி கடன் தொகையை திருப்பித் தரவே இல்லை.
தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் வழக்கு:
இதை அடுத்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. பின் வழக்கை விசாரித்த நீதிபதி, கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகையை ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்கள்.
நீதிமன்றம் உத்தரவு:
அந்த உத்தரவின் படி ஜகஜால கில்லாடி பட உரிமைகள் எல்லாம் விற்று வரக்கூடிய பணத்தில் தங்களின் கடன் தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். ஆனால், படத்தினுடைய வேலைகள் முழுமை அடையாததால் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சிவாஜிகணேசன் உடைய வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
https://www.youtube.com/watch?v=ip_xUQyd8ho
சிவாஜி வீடு ஜப்தி:
இதை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஈசன் ப்ரொடக்ஷன் தரப்பில் அவகாசம் கொடுத்தும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சிவாஜி கணேசனுடைய வீட்டை ஜப்தி செய்ய வேண்டும்.
இது சம்பந்தமாக சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை மார்ச் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.