ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப வாழ்க்கை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். பின் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிஸ்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்வதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் சில போஸ்ட், புகைப்படங்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார். பின் ஜாய் கிரிசில்டாவுக்கு குழந்தை பிறந்தது. இதை அடுத்து ஜாய் கிரிசில்டா, தனக்கு நீதி வேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பேட்டி அளித்து வருகிறார். இதை அடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவித்து வரும் ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜாய் கிரிசில்டா சர்ச்சை:
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. ஜாய் கிரிசில்டா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி இருக்கிறார். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மாதம் பட்டி ரங்கராஜுக்கு எதிரான ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் அவர்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு:
அவரை திருப்பி அனுப்பி வைத்தார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிசில்டாவை 8 மணி நேரமாக காவல் நிலையத்தில் உட்கார வைத்து விசாரணை நடத்தினார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதை அடுத்து மாதம் பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள செய்ய வேண்டும். டி என் ஏ பரிசோதனைகள் செய்த பின் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க மாதம் பட்டி ரங்கராஜ் தயாராக இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=r34JGnKlC5E
நீதிமன்றம் உத்தரவு:
பின் என்னுடைய நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகிறார்கள். youtube சேனல்கள் தங்களை பற்றி அவதூறு வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, வழக்கினுடைய தீர்ப்பை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிபதி, மாதம் பட்டி ரங்கராஜ் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.