சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா..! சாப்பாடு தான் முக்கியம்..!வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

By Rajkumar · 31/12/2018

இந்த ஆண்டு சிறுவர்களின் பல்வேறு காமெடியான விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அனைவரும் புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர். 2018ம் ஆண்டில் எவ்வளவோ வீடியோக்கள் இணைய தளங்களையே ஆக்கிரமித்தன.

https://www.youtube.com/watch?v=Fc_5vX7VlIU

அதில், நம்மூர் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம், “அடிக்காம திட்டாம குணமா வாயால சொல்லணும்”-னு மழலை குரலில் பேசிய வீடியோ செம வைரலானது.
அப்படியொரு வீடியோ ஒன்று வருடக் கடைசியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவனின் உறவினர் ஒருவர், “இளைஞர் அணி சங்கத்துல நீ சேர்ந்துட்ட.. போய் உங்கப்பாட்ட 2000 ரூபா பணம் வாங்கிட்டு வா” என்று சொல்கிறார்.

அதற்கு ‘ம்’ என்று தலையாட்டிவிட்டு நகரும் சிறுவனிடம், ‘திரும்ப வருவியா?’ என அவர் கேட்டதும் ‘சாப்டுட்டு வரேன்’ என்கிறான். அதற்கு அந்த உறவினர், ‘சாப்டுட்டு வறியா?… சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா?’ என்று கேட்க, ‘சாப்பாடு தான் முக்கியம்’ என்று எதார்த்தத்தைச் சொல்ல, அவர் மீண்டும் அதட்டி கேட்க, ‘எனக்கு பசிக்கும்-ல, நான் சாப்டுட்டு வரக் கூடாதா’ என்று சிறுவன் அழ ஆரம்பித்துவிடுகிறான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full