‘ஆட்டோகிராஃப்’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய இது தான் காரணம் - இயக்குனர் சேரன் கொடுத்த விளக்கம்
ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் பற்றி சேரன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருந்தது.
பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் மீண்டும் இயக்கத்தில் இறங்கி இருக்கிறார்.
சேரன் திரைப்பயணம்:
இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து தான் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சேரன், ஆட்டோகிராப் படத்தை ரீ-ரிலீஸ் செய்வதாக கூறி இருந்தார். அதில் 2கே கிட்ஸ்களை கவர் பண்ணுவதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தார். நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஆட்டோகிராப் ரீயூனியன் என்ற பெயரில் ஒரு நிகழ்வை படக்குழுவினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஆட்டோகிராப் ரீ-ரிலீஸ்:
இந்த நிகழ்வில் சினேகா, இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், பாண்டியராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் அமீர், ஆட்டோகிராப் படத்தில் சேரனுடன் பணியாற்றி இருந்த உதவி இயக்குனர்கள், சேரன் என பலருமே கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சேரன், 21 வருடங்களுக்கு பிறகு ஆட்டோகிராப் படம் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம் தெரியுமா? இன்றும் என்னுடைய படம் எங்கோ ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரோ ஒருவரை கையை பிடித்து அழைத்துக் கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என் வெற்றியாக நான் பார்க்கிறேன். அப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தைக் கூட அப்படி தான் உருவாக்கினேன்.
https://www.youtube.com/watch?v=kLoiieaxpr0
சேரன் சொன்னது:
எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும். இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே என்று சொல்வதுதான் இந்த படத்தினுடைய மையக்கரு. இந்த தலைமுறையினர் இந்த படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் தான் நாங்கள் மீண்டும் வெளியிட இருக்கிறோம். இந்த படத்தை ற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்வான்ஸ் போன்ற புதிய இசை நுட்பங்கள் எல்லாம் இணைத்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.