தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திருமணம் படத்தை இயக்கி இருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பயணம். இந்த வெப்சீரிஸை ஓ டி டி தளத்தில் சேரன் வெளியிட்டு இருக்கிறார். இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்யபாரதி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சேரனின் இந்த பயணம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இந்த இணைய தொடரில் ஐந்து பேருடைய வாழ்க்கை கதையை வைத்து சேரன் கொடுத்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தின் அதிபராக சரத்குமார் இருக்கிறார். இவர் புதிய மாடல் எஸ்யூவி கார் ஒன்றை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த நினைக்கிறார். அந்த வேலையை பொறுப்பேற்று செய்ய ஒரு பதவி உருவாக்கிறார். மிகப் பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்க பல தேர்வுகளை வைக்கிறார். இறுதியில் இந்த பதவிக்கு ஐந்து பேர் தேர்ந்து எடுக்கிறார்கள்.

Advertisement

இவர்கள் ஐந்து பேருமே வெவ்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள். இந்த பதவிக்காக இவர்கள் செய்த போராட்டம், எதிர்கொள்ளும் சவால்கள், கடைசியில் யாருக்கு கிடைத்தது? என்பதே மீதி கதை. இந்த வெப் சீரிஸ் முழுக்க ஐந்து பேருடைய பிளாஷ் பேக் காட்சியாகவே இருக்கிறது. முதலில் அமீர் சுல்தான் என்ற கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். இவர் எம்டெக்கில் முதல் இடம் பிடித்தவர். இவர் முஸ்லிமாக இருப்பதே இவருடைய ஒரே பிரச்சனை. மத அடையாளத்தை வைத்து இவருக்கு வேலையும், உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. இதனால் இவர் நிறைய இழந்து விடுகிறார்.

இதற்காக இவர் அந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார். ராகவ் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்திருக்கிறார். இவர் நிறைய கனவுகளோடு அமெரிக்காவுக்கு செல்கிறார். இவர் வசதிகளோடு இருப்பதால் உதவும் மனப்பான்மையோடு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் புதிய விசா கொள்கையினால் இவருடைய அமெரிக்க வேலை பறிபோகிறது. இதனால் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற இந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வேலை தேவைப்படுகிறது. இதனால் இவரும் அந்த வேலைக்காக போராடுகிறார்.

Advertisement

நித்திஷ் என்ற கதாபாத்திரத்தில் காஷ்யப் நடித்திருக்கிறார். இவர் ஒரு நாள் போதையில் செய்த வேலையால் வட இந்தியா முழுக்க சோசியல் மீடியாவில் பிரபலமாகி விடுகிறார். இவரை பலருமே திட்டியும் கண்டித்தும் வருகிறார்கள். இதனால் இவருடைய குடும்பம், காதலி என பலரும் வெறுத்து ஒதுக்கிறார்கள். இதனால் அவர் ஒரு கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். பிரணவ் என்ற கதாபாத்திரத்தில் ஆரி நடித்திருக்கிறார். இவர் சமூக உணர்வுள்ள இளைஞனாக இருக்கிறார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முழு நேர அரசியல்வாதியாக மாற நினைக்கிறார்.

Advertisement

அப்போது இவருடைய சகோதரன் இறந்து விடுகிறார். வேற வழி இல்லாமல் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தத்தில் ஆரி வருகிறார். அதனால் இவர் வேலை தேடி செல்கிறார். லதா என்ற கதாபாத்திரத்தில் திவ்யபாரதி நடித்திருக்கிறார். இவர் சுயமாக முன்னேறி வாழ வேண்டும் என்று நினைக்கும் பட்டதாரி. விவசாயமே இந்தியாவின் அடையாளம். விவசாயத்தின் மூலம் மிகப் பெரிய சமூகத்தை உண்டு பண்ணலாம் என்றெல்லாம் புரட்சி செய்பவர். அதற்காக இவர் வேலை தேடி செல்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், வேலை முக்கியம் என்பதையும் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

ஆட்டோ மொபைலில் உருவாக்கப்பட்டிருக்கும் .பதவிக்காக இவர்கள் ஐந்து பேருமே போராடுகிறார்கள். கிளைமாக்ஸின் சில காட்சிகள் நாடகத்தன்மையாக இருக்கிறது. இறுதியில் யார் தேர்வாகிறார்கள்? என்பதை தான் சுவாரசியமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் சில எபிசோடுகள் எல்லாம் நடிகர்களுடைய அறிமுகமே சழிப்படைய வைத்திருக்கிறது. மேலும், பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆனால், எடிட்டிங் ஏரியாவில் தான் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மேலும், சில நடிகர்களின் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் மொத்த சீரிஸ்மே வசனங்களால் நிரப்பப்பட்டு இருப்பது பெரிய ட்ராபேக் ஆக இருக்கிறது. அரசியல், விவசாயம், இளை ஞர்களுடைய நிலை, அமெரிக்க வேலையால் ஏற்படும் சிக்கல்கள், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்பு போன்ற பல சமூக பிரச்சனைகளை இந்த படத்தில் இயக்குனர் பேசி இருக்கிறார். ஆனால், நிறைய வசனங்கள் வருவதால் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் செல்கிறது. இதை பொறுமையாக பார்த்தால் நன்றாக இருக்கும். ஆபாசம், வன்முறை காட்சிகள் இல்லாமல் தன்னுடைய ஸ்டைலில் இளைஞர்களுக்காக ஒரு சொல்லும் மெசேஜாக இந்த படத்தை இயக்குனர் கொண்டு சென்றது பாராட்டு. மொத்தத்தில் சுமாராக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சமூகப் பிரச்சினையை இயக்குனர் காண்பித்திருக்கிறார்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது

ஆபாசம், வன்முறை காட்சி இல்லாத கதையை இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று

குறை:

எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆரம்பக் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

வசனங்களை குறைத்திருக்கலாம்

தேவையில்லாத சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கி இருக்கலாம்

நீளத்தை குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் சேரனின் பயணம்- முயற்சி

Advertisement