சீமான் கட்சியில் கூட்டணி வைக்க ஒரு தகுதி வேண்டும், அது இருக்கா? இயக்குனர் சேரன் ஆவேசம்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சீமான். இவர் சினிமாவில் தாண்டி அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவர் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருக்கிறார். தற்போது நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சீமான். இப்படி இருக்கும் நிலையில் சீமானுக்காக திரையுலகினர் சேர்ந்து ஒரு விழா நடத்தி இருந்தார்கள்.
அதில் கலந்து கொண்ட சேரன், கூட்டணி வைக்கிறதுக்கு கூட்டணி வைப்பவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும்.
ஏன்னா, 15 வருஷமா இந்த கட்சி நிறைய கொள்கைகளுடன், நிறைய கட்டமைப்புகளோடு, நிறைய திட்டங்களோடு கஷ்டப்பட்டு உழைத்து நிறைய தம்பி தங்கைகளை உருவாக்கியிருக்கிறது. அதனால் இந்த கட்சிக்கு என்று ஒரு தனித் தகுதி இருக்கிறது. அது அசாதாரணமாக ஒரு சினிமாக்காக, கவர்ச்சிக்காக ஒரு கட்சியில் சேர்ந்து விட்டது என்றால் நாம் தமிழர் என்பது செத்துவிடும்.
சேரன் சொன்னது:
சீமானோட கூட்டணி சேரனும் என்று நினைக்காதீர்கள், வரவும் வராதீர்கள். சீமான் என்னைக்குமே தனி ஆளு. யாரோ ஒருவர், இந்த கட்சி கூட்டணியில் சேர்ந்தால் ஒரு நாலஞ்சு பேர் உள்ள போய் சட்டசபையில் பேசலாம் என்று சொன்னார்களாம். அட கண்டாவி பிடித்தவர்களா, 234 தொகுதிகளும் நாங்க தான். நாங்க தான் வருவோம். நாங்கள் வந்தால் சட்டசபையில் நாங்களே பேசிக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
திறமை இருந்தும் இவன் ஏன் சினிமால கூப்புல இருக்கான்னு இப்ப தான் தெரியுது 😳😳😳😳 pic.twitter.com/CnHyCFaFGQ
— Kanchipuram Vijay Fan (@VfcKanchipuram) April 14, 2026
சீமான் கட்சி:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.
விஜய் அரசியல்:
இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டது. இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார். விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.