உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் - விஜய்க்கு வாழ்த்து சொல்லி சேரன் போட்ட பதிவு

By subhashini · 6/5/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.

விஜய் வெற்றி:

பின் தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள். இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சேரன் பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன் விஜயை விமர்சித்து நடிகர் சேரன் பல கருத்துக்களை சொல்லி இருந்தார். தற்போது விஜய் வென்ற பின் சேரன் போட்ட பதிவில், சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு.விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்.

மனம் வருந்திய சேரன்:

எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full