தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சியை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.

கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இருட்டு போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார்.

Advertisement

அதே போல கொட்டாச்சி மகள் மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்ததற்கு இவருக்கு சமீபத்தில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்துஇருந்தது . இந்த விருதை தன் தந்தை கொட்டாச்சி உடன் சென்று வாங்கிஇருந்தார் மானஸ்வி. அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வந்தது . இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொட்டாச்சிக்கும், அவருடைய மகள் மான்ஸ்விக்கும் தங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கொட்டாச்சி தனது அன்பு மகள் மாணவியின் பெயரை தனது கையில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மானஸ்வி திரிஷா நடித்துள்ள பிரமபத விளையாட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

Advertisement
Advertisement