சீரியலில் கூட இப்படி ஒரு ஆபாசமா.! சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சின்மயி.!

By Rajkumar · 16/5/2019

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான சினமயி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த பின்னர் அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் சிலர் ஆறுதல் கூறி வந்தாலும், திரையுலகை சேர்ந்தவர்களே, இவரை எதிர்த்தும் வருகிறார்கள்.

https://twitter.com/Rahul22ks/status/1128688673438851073

இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் பாடகி சின்மயிக்கு ட்வீட் செய்திருந்தார், அதில் சன் தொலைக்காட்சியில் நேற்று மாலை ஒரு சீரியலில் ஒரு பெண்ணை பழி வாங்குவதாக எண்ணி அந்த பெண்ணின் சொந்த சகோதரியே ரவுடியை வைத்து பலாத்காரம் செய்ய சொல்கிறார்.

இந்த காட்சியை 15 நிமிடத்திற்கு மேல் செல்கிறது. அதிலும் அந்த பெண்ணை 10 முறை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணின் சகோதரியே அந்த ரௌடிகளிடம் கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளார். அந்த தொலைக்காட்சி தொடர் வேறு எதுக்கும் இல்லை சன் தொலைக்காட்சியில் தினந்தோறும்மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு தொடர் தான்.

https://twitter.com/Chinmayi/status/1128895199210381313

https://twitter.com/saikirankannan/status/1128853187153125378

ரசிகரின் இந்த டீவீட்டை கண்ட சின்மயி இது போன்ற காட்சிகளை நீங்கள் டிவி தொடர்களை கண்டால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு நீங்கள் புகார் அளிக்காமல் என்று குறிப்பிட்டதோடு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு டேக் செய்துள்ளார் சின்மயி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full