பொள்ளாச்சி காம பிசாசுகளுக்கு இருக்கும் அரசியல் தொடர்பு.! தைரியமாக ட்வீட் செய்த சின்மயி.!

By Rajkumar · 11/3/2019

இன்று சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருவது பொள்ளாச்சி பாலியல் வீடியோ தான். பொள்ளாச்சி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல் தான் பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது என்று செய்திகள் வெளியானது. திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது என்றும், இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Chinmayi/status/1104999698874753024

இந்த நிலையில் பொள்ளாச்சி பலாத்காரத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக பாடகி சின்மயி தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், பொள்ளாச்சி கும்பல் கற்பழிப்புக் குழு அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுடன் 'நண்பர்களாக' அல்லது சில 'பயணக் குழு' எனக் கூறி பெண்களை கற்பழிக்க முயல்கின்றனர். அவர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் அதே பாலியல் வன்கொடுமை செய்த நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Chinmayi/status/1105000363269214208

இதுகுறித்து மேலும் பேசியுள்ள சின்மயி, அரசியல்வாதிகள், சமுதாயம் பெண்களை உண்மையில் கவனித்துக்கொள்கிறதா? பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் பலாத்காரம், எந்தவொரு நீதிக்கும், மீண்டும் மீண்டும் பழிவாங்கப்படுவதற்குமுன்பே ,பெண்களுக்காக பேசுங்கள் இதுதான் உரிய நேரம். நீங்கள் நேஷனல் மீடியாவைத் தேர்ந்தெடுத்தால் எல்லோரும் அதைப் பற்றி ட்வீட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full