எப்படி ராஜா, இப்படி ஒரு நபருடன் வேலை செய்றார். Me Too புகாரில் சிக்கிய இயக்குனர் குறித்து சின்மயி போட்டு ட்வீட்.

By Rajkumar · 9/1/2022

சமீப காலமாகவே மீடு பிரச்சனை சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை என பலரும் இந்தப் பிரச்சனையை சந்தித்து உள்ளார்கள். அதில் ஒருவர் தான் பின்னணி பாடகி சின்மையி. இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகி. இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது.

அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது சின்மயி இயக்குனரும், நடிகருமான சுசிகணேசன் குறித்து தற்போது ஒரு டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் சுசி கனேசன்.

சுசி கனேசன் இயக்கிய படங்கள்:

5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். ஹிந்தியிலும் இவர் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்போது மீண்டும் இவர் தமிழ் திரையுலகில் படம் இயக்க இருக்கிறார். இவர் இயக்கும் படத்திற்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று பெயர் வைத்துள்ளார். மேலும், இந்த படம் 1980களில் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியை கொண்டு ஆக்ஷன் கதையாக உருவாக உள்ளது.

சுசி கனேசன் இயக்கும் படங்கள்:

முழுக்க முழுக்க இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க உள்ளார். இந்த படத்தை சுசிகணேசனின் 4 வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பணியாற்ற உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று சுசிகணேசன் கூறியிருந்தார். தற்போது இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சுசிகனேசன் இயக்கிய படங்களுக்கு தேவா, வித்யாசாகர், பரத்வாஜ் போன்ற பல கலைஞர்கள் இசை அமைத்து இருந்தார்கள்.

சுசி கனேசன் குறித்து சின்மயி போட்ட டீவ்ட்:

முதன் முறையாக இந்த படத்தில் இளையராஜாவுடன் இணைந்து இருக்கிறார் சுசிகனேசன். மேலும், இந்த படத்தை அடுத்து வீரத்தமிழச்சி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று கதையை நயன்தாராவை வைத்து சுசிகணேசன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இதைப் பார்த்த சின்மயி அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, இப்படி ஒரு ஆளுடன் படத்தில் இளையராஜா சார் வேலை செய்வதா? இவரைப் பற்றி பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், எல்லாம் தெரிந்தும் இவருடன் இசையின் இமயம் இளையராஜா பணியாற்றுகிறாரா? என்று பதிவிட்டுள்ளார். இப்படி சின்மயி பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

சுசி கனேசன், லீனா விவகாரம்:

ஏன் இப்படி சின்மயி? இவரை பற்றி கூறியிருக்கிறார் என்றால், சில வருடங்களுக்கு முன் லீனா மணிமேகலை, சுசி கணேசன் விவகாரம் பலருக்கும் தெரியும். காரில் ஏறி பாலியல் ரீதியாக சுசிகணேசன் தொந்தரவு கொடுத்தார் என்று லீனா மணிமேகலை குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து தன் மீது எந்த ஒரு தவறும் இல்லை. அதை நிரூபிக்க தயார் என்றும் சுசிகணேசன் கூறியிருந்தார். பின் தன்னை நிரூபிக்கும் வகையில் லீனா மணிமேகலை குறித்து கேவலமாக சுசிகணேசன் விமர்சித்து பதிவு போட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து லீனா மணிமேகலையும், சுசிகணேசன் இருவரும் மாத்தி மாத்தி அடுக்கடுக்காக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full