அசின் இங்க இருந்து பாலிவுட்க்கு போனதுக்கு காரணமே ராதா ரவி தான் - சின்மயி

By Rajkumar · 1/9/2024

நடிகை அசின் தமிழ் சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணமே ராதாரவி தான் என்று பாடகி சின்மயி கூறியிருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு இது குறித்து முதலமைச்சர் பினராய் விஜயனிடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சின்மயி கூறியது:

இந்நிலையில் தற்போது பாடகி சின்மயி, ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர், படங்களில் கூட பாலியல் போன்ற சென்சிட்டிவான விஷயங்களை எடுப்பதற்கு ஆண்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாதிரி விஷயங்களை பெண் டைரக்டர்கள் படம் எடுக்கிறேன் என்று வந்தால் எந்த ப்ரொடியூசரும் பணம் கொடுக்க முன்வர மாட்டார்கள். கஷ்டப்பட்டவன் அவன் கஷ்டத்தை சொல்வதற்கான வாய்ப்பு இங்கு கிடப்பதில்லை.

View this post on Instagram

A post shared by ABP Nadu (@abpnadu)

என்னை பான் செய்தார்கள்:

அதேபோல், எனக்குத் தெரிந்த பாலியல் தொடர்பான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் போடுவதற்கு முன்பாக, அந்த விஷயங்கள் நடந்தது உண்மைதானா என்று நான் விசாரிப்பதற்குள், இந்த விஷயத்தில் உனக்கு பணம் கொடுக்க வில்லையா. அதனால் தான் நீ சமூக வலைத்தளத்தில் இதை பத்தி பேசவில்லை என்று என்னை குற்றம் சாடுகிறார்கள். நான் என்ன பண்ணேன். என்னையும் பான் பண்ணி சம்பாத்தியம் இல்லாம உட்கார வச்சுட்டாங்க. நான் வேறு விதங்களில் என் படிப்பை வைத்து சம்பாதித்துக் கொள்கிறேன் அது இப்ப பிரச்சனை கிடையாது.

ராதாரவி குறித்து :

ஆனால், பாட்டு தான் எனக்கு ஒரே வழி என்றால், வைரமுத்து விஷயத்தை கூட என்னால் சொல்லியிருக்க முடியாது. நடிகர் ராதாரவி எதிர்த்துக்கொண்டு, 15 வருடங்கள் முன்னாடி என்னால் இதை சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆளு, டக்குனு ரெட் கார்டு கொடுத்துடுவான். நடிகை அசினுக்கெல்லாம் ரெட் கார்டு கொடுத்த நாய்கள் தான் இவங்க எல்லாம். நடிகை அசின் எந்த தப்பும் பண்ண கிடையாது. அவங்க நடிச்சிட்டு இருந்த ஹிந்தி படத்தின் ஒரு பாடல் ஷூட்டிங் ஸ்ரீலங்காவில் நடந்தது. அதற்கு இந்த ஆம்பளைகள் எல்லாம் சேர்ந்து அசினுக்கு ரெட் கார்ட் கொடுத்தாங்களாம்.

அசின் ரெட் கார்ட்:

இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனம் எங்க இருக்க முடியும். ஒரு நடிகைக்கு ஷூட்டிங் லொகேஷன் மாத்திர பவர் எங்கயாவது இருந்திருக்கா. இந்த மாதிரி ஒரு பொறுக்கி கும்பல் ரெட் கார்ட் கொடுக்கிறேன் என்று சொன்னதால, நீ என்ன கொடுக்கிறது நானே போறேன்னு சொல்லிட்டு அசின் பாலிவுட் போய்ட்டாங்க. அங்க நல்லா நடிச்சு, உலகத்திலேயே பெரிய தொழில் அதிபரை கல்யாணம் பண்ணி நல்லா செட்டில் ஆயிட்டாங்க. இப்போ இவங்களால ஏணி வச்சா கூட அசினை எட்ட முடியாது. ஒருவிதத்தில் அசின் வெற்றிகரமாக இருக்கிறார் என்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ‌

Tamil Behind Talkies AMP · Quick view
View full