பெண்கள் குறித்து மோசமாக கமன்ட் செய்த சரவணன்.! கேவலப்படுத்திய சின்மயி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரை சித்தப்பு என்று அழைத்து மிகுந்த மரியாதையையும் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சரவணன் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் கமல், சேரன் மற்றும் மீராவின் பஞ்சாயத்து குறித்து பேசிவ்ண்டிருந்தார். மீரா, சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று குற்றம் சாட்டி இருந்ததால் அவருக்கு குறும்படம் ஒன்றை போட்டுக்காண்பித்தார் கமல்.
இதையும் பாருங்க : மீரா மிதுனின் கணவரை பார்த்துள்ளீர்களா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
மேலும், அந்த குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் கமல். மேலும், மீராவிற்கு அறிவுரை வழங்கிய கமல், நீங்கள் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்தால், நீங்கள் பேருந்தில் எல்லாம் போகவே முடியாது.
https://twitter.com/Chinmayi/status/1155196265363197953
அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் 'நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்' என்று கூறினார். இந்த நிலையில் இந்த விடியோவை பிரபல பாடகி சின்மயிக்கு ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இந்த விடியோவை கண்ட சின்மயி, பேருந்தில் பெண்களை உரசுவதாக கூறும் ஒரு நபரின் பேச்சை பிரபல தொலைக்காட்சியில் பெருமையுடன் ஒளிபரப்புகிறது அதனை ரசிகர்களும் கைத்தட்டி ஆதரவளிக்கின்றனர். இது என்ன விளையாட்டா? பெண்களிடம் தவறாக நடப்பவர்களை கண்டு ரசிகர்கள் கைதட்டுவார்களா என்று பதிவிட்டுள்ளார்.