நயன்தாராவின் மாற்றத்தை கொச்சைபடுத்தி குவிந்த கமண்ட் - தட்டி கேட்க முடியாததால் சின்மயி ஆவேசம்.

By Rajkumar · 23/12/2022

நயன்தாராவை பற்றி அவதூறாக கமன்ட் செய்ததால் சின்மயி தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவின் 10 ஆண்டுக்கும் மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் பலவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. தற்போது நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ஹாரர் திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

View this post on Instagram

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

சமீபத்தில் நயன்தாரா இந்த படத்தின் preview ஷோவை காண தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து இருந்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பிரபலமான ஊடகம் ஒன்று பகிர்ந்து இருந்தது. அந்த பதிவிற்கு கீழ் பல கமெண்டுகளை நயன்தாராவின் மார்பகங்களை பற்றி மோசமாக தான் வந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த மோசமான கமெண்ட்களை எல்லாம் பகிர்ந்து ஒரு பெண்ணை இப்படியா விமர்சனம் செய்வது என்று சின்மயி தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதே போல இப்படி மோசமாக கமன்ட் செய்வதை கண்டித்து பெண் ஒருவர் கமண்ட் செய்து இருந்தார். ஆனால், அந்த கமெண்டை அந்த பக்கத்தின் admin நீக்கி இருப்பது போல தெரிகிறது. இப்படி ஒரு பெண்ணை பற்றி வரும் மோசமான கமெண்டுகளை டெலீட் செய்யாமல், மோசமான கமண்ட் செய்பர்களை தட்டி கேட்கும் நபர்களின் கமெண்டுகளை டெலீட் செய்து வருகின்றனர் என்று சின்மயி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும், அந்த பதிவில் தம்மால் எந்த கமெண்டையும் போடாமல் தடுத்து இருக்கிறார்கள் என்றும் ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். சின்மயி இப்படி நயன்தாராவிற்கு ஆதரவாக பதிவிடுவது முதல் முறையல்ல. நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ. அதே அளவு அவரின் கடந்த காலத்தை எல்லாம் குறிப்பிட்டு சில மோசமான கமெண்டுகளும் வந்தது.

நயன்தாரா திருமணம் முடிந்த போது மருத்துவர் ஒருவர் 'இதை கமன்ட் செய்ய ஆவலுடன் இருந்தது. இவரின் நடிப்பு திறமையை நான் மதித்தாலும், 40ஐ நெருங்கி பாட்டி வயதை வயதில் இவர் எப்படி குடும்பம் குழந்தையை பெறப்போகிறார் என்று பாவமாக இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF ) இவருக்கு உதவும் என்று நம்புகிறேன் ' என்று மோசமாக கமன்ட் செய்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பின்னணி பாடகி சின்மயி, இவரின் இந்த பதிவை பகிர்ந்து அவரின் விவரங்களையும் பதிவிட்டுஇருந்தார் . அதில் 'மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், இதை நான் அனுப்பினேன். ஒரு நடிகை திருமணம் முடிந்து இருக்கிறது. அதை பார்த்து இந்த மருத்துவர் இப்படி ஒரு கேவலமான கமெண்டை போட்டுள்ளார் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full