தமிழ் சினிமாவில் அது இல்லையா, நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு கொந்தளித்து பாடகி சின்மயி போட்ட பதிவு இதோ
நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு, பாடகி சின்மயி கொந்தளித்து இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயனிடம் இது தொடர்பான 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், கடந்த 19ஆம் தேதி தான் ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டு இருந்தது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடை திறப்பு விழாவில் ஜீவா:
இந்நிலையில், பிரபல நடிகர் ஜீவா சமீபத்தில் தேனி மதுரை சாலையில் உள்ள தனியார் ஜவுளி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். ஜவுளிக் கடையை திறந்து விட்டு அங்குள்ள ரசிகர்களுடன் சேர்ந்து ஜீவா புகைப்படம் எடுத்திருந்தார். அதற்குப்பின் பத்திரிக்கையாளர்கள், கேரளாவில் நடக்கும் பாலியல் புகார் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை ஜீவாவிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், நான் இங்கு நல்ல விஷயத்திற்காக வந்திருக்கிறேன். அதைப் பற்றி மட்டும் பேசுவோம். தேனிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறேன். பல இண்டஸ்ட்ரியல் பல விஷயங்கள் நடக்கிறது.
https://www.youtube.com/watch?v=_QrW0EfgnG4
ஜீவாவின் பதில்:
மேலும், உங்களுடைய வேலை நியூஸ் சேகரிப்பது தான். ஆனால், எங்களுடைய வேலை நல்ல சுற்றுச்சூழலை அமைத்துக் கொடுப்பது. நீங்க இங்க நிறைய பேரு உடைய முகத்தில் சிரிப்பை பார்த்திருப்பீர்கள். அந்த சிரிப்புக்காக தான் நாங்க இங்க வந்திருக்கிறோம் என்றார். அப்பொழுது ஒரு செய்தியாளர் குறுக்கிட்டு, சார் நீங்க ஒரு நடிகர் என்பதால் தான் இந்த கேள்வியை கேட்கிறோம் என்றார். அதற்கு நடிகர் ஜீவா, தமிழ் இண்டஸ்ட்ரியல் அந்த பிரச்சனை இல்லை என்றார்.
ஜீவா-பத்திரிக்கையாளர்கள் விவாதம்:
ஆனால், தொடர்ந்து அடுக்கடுக்காக சர்ச்சை கேள்விகளை கேட்ட செய்தியாளர்களிடம், நடிகர் ஜீவா சிறிது கோவப்பட்டு இதற்கு நான் ஏற்கனவே பதில் அளித்து விட்டேன், உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தெரியாதா? என்று ஆவேசப்பட்டு பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக இருந்தது. கடைசியில் ஜீவாவை அங்கிருந்தவர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
I really do not understand how they are saying sexual harassment does not exist in Tamil Industry.
— Chinmayi Sripaada (@Chinmayi) September 1, 2024
HOW?! https://t.co/sm9qReErs0
சின்மயி பதிவு:
தற்போது பாடகி சின்மயி, ஜீவாவின் கருத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டியுள்ளார். அதில்,' தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் இல்லவே இல்லை என இவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை. எப்படி?' என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி சின்மயி, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களுக்கு பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக ஹேமா கமிட்டி குறித்து கூட இவர் நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.