மாடியிலிருந்து தவறி விழுந்து காப்பாற்றிய குழந்தையின் தாய் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை பெள்ளாதி ரோடு என்ற பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய இரண்டாவது மகளின் பெயர் ரம்யா. இவர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சென்னையில் தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கணவன், மனைவி இருவருமே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர்களுடைய 7 மாத கைக்குழந்தை இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பால்கனியின் வழியாக தவறி விழுந்து கீழ்தளத்தில் உள்ள கூரையின் மேல் சிக்கியிருந்தது. அந்த காட்சி பார்ப்பதற்கே நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு இருந்தது.

Advertisement

பால்கனியில் தவறி விழுந்த குழந்தை:

பின் அருகில் இருந்தவர்கள் எப்படியோ போராடி அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்கள். மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ இணையத்தில் மிக வைரலாகி இருந்தது. இதை பார்த்த பலருமே குழந்தையின் தாய் ரம்யாவை தான் மோசமாக திட்டி இருந்தார்கள். இதனால் ரம்யா ரொமபவே மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

ரம்யா நிலைமை:

இதற்காக இவர் மனநல சிகிச்சையும் எடுத்து இருக்கிறார். இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் ரம்யாவிற்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ரம்யா தன்னுடைய சொந்த ஊரான கோவை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது தான் ரம்யாவின் அப்பா, அம்மா இருவருமே குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியே சென்ற போது மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டிலேயே தற்கொலை செய்து இருக்கிறார்.

Advertisement

தற்கொலை செய்த ரம்யா:

பின் வீட்டிற்கு வந்து பார்த்த போதுதான் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சோசியல் மீடியாவில் மோசமா தன்னை குறித்த மோசமான பதிவுகளை பார்த்து ரொம்பவே மனம் உடைந்து தான் ரம்யா தற்கொலை செய்து இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

Advertisement

சின்மயி பதிவு:

உண்மை என்னவென்று தெரியாமல் ஒருவரைப் பற்றி குறை சொல்லாதீர்கள். இது ஒரு உயிரையே பறித்து இருக்கிறது என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சின்மயி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு உங்களுக்கு- குழந்தை ஒரு கேடா என்றெல்லாம் மோசமாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த வீடியோவை சின்மயி டேக் செய்து பிரசாந்தை திட்டியும், ரம்யா பெண்மணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் இருக்கிறார்.

Advertisement