'நான் கர்ப்பமாக இருக்கும் போதே பலரும் எனக்கு குழந்தை இல்லனு கேலி பண்ணாங்க' - இரட்டை குழந்தைக்கு தாயான சின்மயின் உருக்கமான பதிவு.

By Arun · 22/6/2022

தமிழில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மயியும் ஒருவர். பின்ணணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கும் எண்ணெற்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார் சின்மயி. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #metoo விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதிலும் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியது.

இந்த குற்றச்சாட்டிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்மயி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சைக்குரிய பாடகி என்ற அளவிற்கு வந்து விட்டார்.வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயி சொல்வது பொய் என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர்.

சின்மயி கணவர் ராகுல் :

சின்மயி கூறுவது உண்மை என்றால் அப்போதே ஏன் சொல்லவில்லை என்று மற்றொரு தரப்பும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

ராகுல் நடித்த படம் இயக்கிய படங்கள் :

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

Twins குழந்தைக்கு தாயான சின்மயி :

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராகுல் - சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்துள்ளது.

சின்மயின் உருக்கமான பதிவு :

இது குறித்து பதிவிட்டுள்ள சின்மயி, குழந்தை தன் கை விரலை பிடித்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் : -“ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.நான் பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன். இதை எல்லாம் தாண்டி நான் மக்களை பற்றி புரிந்துகொண்டேன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full