Surrogacy மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா - Dmல் குவிந்த விமர்சனங்களுக்கு சின்மயி கொடுத்த விளக்கம்.

By Rajkumar · 22/6/2022

சமீபத்தில் Twins குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சின்மயி அறிவித்து இருந்த நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே சமயம் ஒரு சிலர் சின்மயி Surrogacy மூலம் குழந்தை பெற்று இருப்பதாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார் சின்மயி. பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : நான் ஆண்ட்ரியாவ காதலிக்கும் போது எனக்கு 19 வயசு ஆன அவருக்கு - காதல் Break Up ஆன காரணம் குறித்து பேசியுள்ள அனிருத். வீடியோ இதோ.

Twins குழந்தைக்கு தாயான சின்மயி :

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராகுல் - சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்துள்ளது.

சின்மயின் உருக்கமான பதிவு :

இதுகுறித்து பதிவிட்டுள்ள சின்மயி '“ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.நான் பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன். இதை எல்லாம் தாண்டி நான் மக்களை பற்றி புரிந்துகொண்டேன் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றேனா :

பொதுவாக பிரபலங்கள் பலர் கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்துவது, வளைகாப்பு செய்து அந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. அதே போல சின்மயிக்கு 37 வயது ஆகிறது இதனால் சின்மயி Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என்று விமர்சனங்களுக்கு எழுந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சின்மயி.

சின்மயி அளித்த விளக்கம் :

அதில் 'நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடாததால் நிறைய பேர் எனக்கு Dm மூலம் மெசேஜ் செய்து நான் வாடகை தாய் மூலம் தான் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தேனா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். நான் இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன்.

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை :

என்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன். அதை பற்றி தெரியவேண்டும் என்றால் நான் என் குழந்தை பிறக்கும் போது எனக்கு சிசேரியன் செய்த போது பஜனை பாடி இருப்பேன். அதை வேண்டுமானால் பின்னர் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இப்போதைக்கு இதுவே போதும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு பிறந்துள்ள Twinsல் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என்பதையும் தெரிவித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full