'அதுக்கு தனியா காசு கொடுக்கனும்டா' - அபர்ணாவிடம் அத்து மீறிய மாணவனுக்கு ஆதரவாக பதிவிட்ட நபர்கள் - சின்மயி போட்ட பதிவு.

By Rajkumar · 21/1/2023

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர். இவர் மலையாள சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை” என்ற படத்தின் மூலம் தமிழ் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த “மஹேஷிண்டே பிரதிகாரம்” என்ற படம் படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயரை கிடைத்திருந்தது.

ஜிவி பிரகாஷின் சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து இருந்த சூரரைப்போற்று படம் மூலம் தான்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இவருக்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது.

இதை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். கார்த்தியுடன் பெயரிடாத படத்திலும், சில மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அபர்ணா. அந்த வகையில் தான் தங்கம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் தன்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படக்குழுவினர் விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவர் ஒருவர் அபர்ணாவிற்கு பூ கொடுத்துவிட்டு திடீரென கையை பிடித்துள்ளார். மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது திடீரென நடிகை அபர்ணாவின் தோள்களில் கையை போட்டுள்ளார். இதனை சற்றும் விருப்ம்பாத நடிகை அபர்ணா அங்கிருந்து சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார். பின்னர் மீண்டும் மேடை ஏறிவந்த மாணவன் தான் தவறாக எதுவும் செய்யவில்லை உங்களுடைய ரசிகனாகத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தேன் என்று கூறியுள்ளார்.

அப்படி கூறுகையில் மீதும் அபர்ணாவிடம் கைகொடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை ஒருவரிடம் தகாதவாறு நடந்து கொண்ட போது தன்கம் படக்குழுவினரும், நடிகர் வினீத் ஸ்ரீனிவாசனும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் அபர்ணாவிடம் அத்து மீறி நடந்து கொண்ட மாணவனுக்கு அதார்வாக சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை போட்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் 'அவன் தோள் மேல தாண்டா கைய போட்டான், கைய போட்றதுக்கு தனி காசு கொடுக்கணும் 'என்று மோசமாக கமன்ட் செய்து இருக்கின்றனர். இந்த கமெண்டுகளை பகிர்ந்து இருக்கும் சின்மயி 'தமிழ் பேஸ்புக் பக்கம் ஒன்றில் சிலர் போட்டிருக்கும் கேவலமான கமெண்ட்களை பார்த்து மிகவும் பயமாக இருக்கிறது. இதுபோன்ற ஆண்கள் தான் ஆண்களை நம்பி இருக்கும் பெண்களை சுற்றி இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full