தோள்ல கைப்போட்டு நெத்தியில் முத்தம் கொடுத்தான்-வைரமுத்து குறித்து போட்டு உடைத்த சின்மயி அம்மா
வைரமுத்து குறித்து சின்மயின் அம்மா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
சின்மயி-வைரமுத்து ப்ரச்சனை:
இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து சின்மயி அம்மா பத்மாசினி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், சின்மயியை வைரமுத்து போனில் கூப்பிட்டு தேசிய விருதுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்க போகிறோம். விரைவாக வாருங்கள் என்று கூறியிருந்தார். இதனால் நானும் என்னுடைய மகள் சின்மயியும் வைரமுத்து இருந்த இடத்திற்கு போனோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் சின்மயி வைரமுத்துவை பார்க்க சென்றிருந்தார்.
சின்மயி அம்மா பேட்டி:
அப்போது நான் படிக்கட்டுகளில் மேலே ஏறி போகப் போனேன். சின்மயி தலையெல்லாம் களைந்து ஒற்றை செருப்போடு கீழே பயந்து ஓடி வந்தாள். அங்கு ஏதோ தவறாக நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் எதுவும் கேட்காமல் அந்த இடத்திலிருந்து அழைத்து வந்து விட்டேன். நீங்கள் அந்த இடத்திலேயே போலீசுக்கு போன் செய்திருக்கலாம், வைரமுத்துவை கேட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள். அது சரிதான். ஆனால், எது நடக்குமோ அதை தான் நடக்கும். நாங்கள் இப்போதும் மானம், கௌரவத்திற்கு பயந்து தான் அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்தோம்.
வைரமுத்து செய்த வேலை:
சின்மயி தோள் மீது வைரமுத்து கை போட்டு நெற்றியில் முத்தம் கொடுத்திருந்தார். இதை அவள் வீட்டிற்கு வந்த பின்பு தான் சொன்னார். உடனே நான், அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி விட்டேன். இதை நான் அங்கேயே கேட்டிருந்தால் நான் அன்பாகத்தான் முத்தம் கொடுத்தேன் என்று வைரமுத்து சொல்லி இருப்பார். அது உண்மையிலேயே நல்ல தொடுதலா? இல்லை கெட்டதா? என்பது சின்மயிக்கு மட்டும் தான் தெரியும். அது கெட்ட தொடுதலாக இருந்ததால் தான் சின்மயி அங்கிருந்து பயந்து ஓடி வந்து விட்டாள். மீ டு விவகாரம் வரும்போது சின்மயி இடம் பலருமே, உங்களுக்கு ஏதாவது நடந்ததா? என்ன பிரச்சனை? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=vjn3JUVJlN0
சின்மயி குறித்து சொன்னது:
அப்போது கூட நான் அவருடைய காலில் விழுந்து தயவுசெய்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லாதே என்று சொன்னேன். ஆனால், அவள் அதையும் மீறி சொன்னார். அதற்குப் பிறகு தான் சின்மயி சொன்னது நல்லது என்று எனக்கு புரிந்தது. மேலும், வைரமுத்து தேசிய விருதுகள் வழங்கும் குழுவை தன்னுடைய கைக்குள் வைத்திருந்தார். இதனால் வெளியில் சொன்னால் என்னுடைய மகளின் வாழ்க்கை பாதித்து விடுமோ என்ற பயத்தில் தான் சொல்லவில்லை. ஆனால், அதையெல்லாம் எதிர்த்து என் மகள் தைரியமாக சொன்னார் என்று கூறியிருக்கிறார்.