டார்ச்சரால் இறந்த துணை நடிகை, கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர் குறித்து சின்மயி.

By subhashini · 12/12/2023

புஷ்பா பட நடிகர் கைதான சம்பவம் குறித்து பாடகி சின்மயி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் புஷ்பா பட நடிகரை போலீஸ் அதிரடியாக கைது செய்து இருக்கும் சம்பவம் குறித்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஸ்டைலிஷ் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இந்த படத்தில் புஷ்பாவின் நண்பராக கேசவ் வென்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜகதீஷ். இவர் ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறார். இந்த பெண்ணும் இவரை நம்பி காதலித்து இருக்கிறது. பின் இவர் காதல் பெயரில் அந்த பெண்ணை ஏமாற்றி இருக்கிறார். இதனால் அந்த பெண் மனம் உடைந்து தன்னுடைய வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து இருக்கிறார்.

புஸ்பா பட நடிகர் கைது:

இந்த சம்பவம் அந்தப் பெண் வீட்டின் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது. தற்போது போலீசார் அதிரடியாக ஜகதீஷை கைது செய்து இருக்கிறது. ஆனால், இதை தெலுங்கு சினிமா பிரபலங்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்கும் வகையில் பாடகி சின்மயி தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

பாடகி சின்மயி பதிவு:

அதில் அவர், நாட்டில் பாலியல் துன்புறுத்தல் தீர்வு கொள்கை கொண்ட முதல் திரைப்பட அமைப்புகளில் தெலுங்கு பிலிம் சேம்பர் ஒன்று. அந்தப் பெண் தன்னுடைய உரிமைகளை அறிந்து இருந்தால் அவளுக்கு சட்ட உதவி கிடைத்திருக்கும். அவள் பயப்பட்டு இருக்க மாட்டாள். அவள் பாதுகாப்பாக உணர்ந்திருப்பாள். இன்று மற்றொரு இளம் பெண் இறந்து விட்டாள். மேலும், ஒரு ஆள் தன்னை பிளாக்மெயில் செய்வது எளிது என்ற நினைப்பு இருக்கிறது.

ஜகதீஷ் குறித்து சொன்னது:

காரணம், ஒரு பெண்ணின் மரியாதை அவளுடைய உடலில் உள்ளது என்று இந்த சமூகம் சொல்கிறது. அது எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் இருக்கும். தண்டனை பெற்றாலும் ஜகதீஷ் ஜாமினில் தான் இருப்பார். அவ்வளவு தான் வெண்மை சட்டைக்காரர் ஜகதீஷ் என்று பதிவு போட்டிருக்கிறார். தற்போது சின்மயின் பதிவுக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

புஸ்பா படம் குறித்த தகவல்:

இயக்குனர் சுகுமார் தான் புஸ்பா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இந்த படம் இரண்டு பாகமாக உருவாகி இருக்கிறது. புஸ்பா 2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full