கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு.! மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.!

By Rajkumar · 20/5/2019

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். 

https://twitter.com/Chinmayi/status/1130339758612262912

மேலும், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். சின்மயி குற்றச்சாட்டை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இந்த நிலையில் சின்மயிக்கு பெண் ஒருவர் அதிர்ச்சியான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'ஒருமுறை தான் இந்தியாவிற்கு வந்தபோது நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் ஒரு மனோதத்துவ நிபுணரை சந்திக்க முடிவெடுத்தேன். எனக்கு எந்த மருத்துவரையும் தெரியாது என்பதால் எனது நண்பர் ஒருவர் ஒரு மன நோய் நிபுணரை சிபாரிசு செய்தார். சென்னையில் இருக்கும் அவரை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தொலைபேசியில் பேசும்போது அவர் மிகவும் நன்றாக பேசினார்.

எனவே அவரை நான் நேரில் சந்திக்க முடிவு செய்து அவரை நேரில் சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் என்னிடம் உள்ள தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள சொன்னார். அதனை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் கூறினார். எனவே, அவரை நம்பி நான் அனைத்தையும் கூறினேன். ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் பல அந்தரங்க கேள்விகளை கேட்டார். நான் ஏன் இதுபோன்று கேட்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இது அனைத்தும் சிகிச்சையின் ஒரு அங்கம்தான் என்று கூறினார்.

நானும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் பின்னர் அவர் என்னிடம் உன் கணவரை விட்டு விட்டு வேறு யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள் அப்போது தான் நிம்மதியாக இருக்கும் என்று கூறியதும் நானும் அதிர்ச்சிக்குள்ளானேன் இதுபோன்ற மருத்துவர்கள் இருப்பது மருத்துவத்துறைக்கு களங்கம்'என்று அவர் கூறியுள்ளார்.இதனை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சின்மை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full