-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘மகாராஜா’ திரைப்படத்தை புறக்கணித்த பாடகி சின்மயி – காரணம் யார் தெரியுமா?

0
64

பிரபல பாடகி சின்மயி ‘மகாராஜா’ படத்தை புறக்கணித்து இருக்கும் செய்திதான் இப்போது வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் சின்மயி. இவர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துக்கும் இடையே பனிப்போரே ஏற்பட்டது. அதேபோல் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனைவரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். தற்போது மீண்டும் வைரமுத்துவை பற்றி சின்மயின் பதிவு தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்மயி பதிவு:

தனது சமூக வலைதளத்தில் சின்மயி, ‘பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை குறித்து பேசும் படமான ‘மகாராஜா’வில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார் என்பதை அறிந்ததும் வருத்தப்பட்டேன். சிலருக்கு பிடித்தமான ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர் என்று உண்மையை சொன்னதால், சொன்னவரையே வேலை செய்யவிடாமல் தடை செய்வது தமிழ் சினிமா துறையாக மட்டும்தான் இருக்கும். அதனால் நான் அந்தப் படத்தை பார்க்க போவதில்லை. மேலும் அப்படத்தைப் பார்த்து கருத்துக்களை கூறியதற்காக பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தியதாக கேள்விப்பட்டேன்.

குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பார்கள்:

மேலும், தமிழ் சினிமாவில் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்றும், சரியானதை செய்வார்கள் என்றும் நான் நம்புகிறேன். ஆனால், அந்த நம்பிக்கைக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சுகிறது. ஒரு கட்டத்தில் அது பழி வாங்கும் அளவிற்கு செல்கிறது என்பதை உணரும் போது நான் ஆச்சரியப்படுகிறேன். பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்கள் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் பல மடங்கு அதற்கான பலனை அனுபவிப்பார்கள்’ என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மகாராஜா படம்:

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமையை சொன்னதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராதா காஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராமி, பாரதிராஜா, நட்டி, சிங்கம் புலி, முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் வெற்றிக்கு காரணம்:

மேலும் இப்படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து பலரின் பாராட்டுகளையும் பெற்று பிளாக்பஸ்டர் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது மகாராஜா. படத்தின் திரைக்கதை, சஸ்பென்ஸ், திடீர் திருப்பம், ஆக்சன் காட்சிகள் என ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துஉள்ளது. அதனால், படம் வெளியாகி வாரங்கள் கடந்தும் திரையரங்குகளில் மக்களின் அலை ஓயவில்லை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news