மகள்களுடன் கமல் பதிவிட்ட புகைப்படம்.! தரக்குறைவாக பேசிய ரசிகருக்கு சின்மயின் பதில்.!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், சேரன் மற்றும் மீராவின் பஞ்சாயத்து குறித்து பேசிவ்ண்டிருந்தார். மீரா, சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று குற்றம் சாட்டி இருந்ததால் அவருக்கு குறும்படம் ஒன்றை போட்டுக்காண்பித்தார் கமல்.
https://twitter.com/venkatnat1/status/1155917523616841733
அப்போது பேசிய கமல், பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் பேருந்துகளில் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் 'நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்' என்று கூறினார். இந்த நிலையில் இந்த விடியோவை பிரபல பாடகி சின்மயிக்கு ட்விட்டரில் பகிர்ந்தார் சின்மயி.
இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டின் பெண் போட்டியாளருக்கு கர்ப பரிசோதனை.! ரசிகர்கள் ஷாக்.!
அதில் பேருந்தில் பெண்களை உரசுவதாக கூறும் ஒரு நபரின் பேச்சை பிரபல தொலைக்காட்சியில் பெருமையுடன் ஒளிபரப்புகிறது அதனை ரசிகர்களும் கைத்தட்டி ஆதரவளிக்கின்றனர். இது என்ன விளையாட்டா? பெண்களிடம் தவறாக நடப்பவர்களை கண்டு ரசிகர்கள் கைதட்டுவார்களா என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் கமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ஒரு சில தந்தைகள் தங்களது மகள்கள் இப்படி ஆடைகள் அனைவதை பெருமையாக உணர்கிறார்கள். அது போன்றவர்கள் அவர்களது மகள்களிடம் பேருந்தில் யாராவது தவறாக நடந்து கொண்டால் அதனை ஏற்றுக்கொள்வார்கள் போல, என்று மோசமாக ட்வீட் செய்துள்ளார்.
இந்த டீவீடிற்கு பதிலளித்துள்ள சின்மயி, இதில் ஏன் அவர்கள் மகள்களையும் குடும்பத்தையும் இழுகிறீர்கள். பெண்களை கழுத்துக்கு மேல் பாருங்கள். பொரிக்குகளுக்காக பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.