பாட்டுப்பாட மன்னிப்பு கேட்க முடியாது - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி, நடந்தது என்ன?
கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவிலும் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இதனால் இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறார்கள்.
தக் லைப் படம்:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அன்று இசை வெளியீட்டு விழாவிற்கு தீ-யால் வர முடியவில்லை. அதனால் தான் அந்த பாடலை நான் பாடினேன். என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது. என்னுடைய வெர்ஷனையும் தீ உடைய வெர்ஷனையும் ஒப்பிட்டு ஒரு மல்யுத்த போட்டி போல சோசியல் மீடியாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனாக அவர் பாடிய பாடலை நான் மதிக்கிறேன்.
சின்மயி பேட்டி:
அவர் வளர்ந்து வரும் பாடகி. இன்னும் 15 வருடங்கள் கழித்து அவர் நூறு சீன்மயி, 100 ஸ்ரேயா கோசலை கொண்ட திறன் பெற்றிருப்பார். எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருந்தார். இருந்தாலும் சின்மயின் குரலைக் கேட்டு பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சின்மயி போட்டிருக்கும் லேட்டஸ்ட் பதிவில், தக் லைப் படத்தினுடைய ஆடியோ வெளியீட்டு விழா வீடியோ வைரலான போது எனக்கு ரொம்ப பதட்டமாக இருந்தது. காரணம், கடந்த ஆறு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறேன்.
சின்மயி பதிவு:
அது எல்லோருக்குமே தெரியும். நான் நிறைய கோயில்களில் கண்ணீர் எல்லாம் வடித்து இருக்கிறேன்.
கடவுளிடம் அழுதுவிட்டு வெளியே வந்ததும் துணிச்சலான பெண் போல் நடந்து நடித்திருக்கிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு கடவுள் எப்போது செவி சாய்ப்பார் என்றெல்லாம் காத்திருந்தேன். அந்த அளவிற்கு என் மனதில் நிறைய வழிகள் இருந்தது. இந்த பாடலின் வெற்றி என்னுடைய பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மணிரத்தினம் சார் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நம்பி என் குரலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
தமிழ் சினிமாவில் தடைசெய்யப்பட்ட காரணம்:
இதை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சின்மயி, நான் சந்தா கட்டவில்லை என்று டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக சொன்னார்கள். ஆனால், உண்மை காரணம் நான் மீடு பற்றி பேசியிருந்தது தான். எனக்கு தடை விதிக்கப்பட்டது என்ற தகவலை கடிதம் வாயிலாக தான் வந்தது. திரும்ப சேர வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கணும் என்று சொன்னார்கள். அவருடைய காலில் விழ வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் முடியாது என்று சொன்னேன். ஒரு வாரம் முன்பு கூட மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏன் கேட்கணும்? அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கூறி இருந்தார்.