அவங்க நிரந்தர வேலை தானே கேட்கிறாங்க, அரசுக்கு அதில் என்ன பிரச்னை? பாடகி சின்மயி சராமாரி கேள்வி

By subhashini · 11/8/2025

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பாடகி சின்மயி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலைகள் நடப்பதால் அதை எதிர்த்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்கிறார்கள். அதோடு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கமே இதை எடுத்து செய்ய வேண்டும் என்றும் சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடக்கிறது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் போராட்ட குழு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் கூட எந்த ஒரு முடிவுமே கிடைக்கவில்லை.
இதை அடுத்து போராட்டம் செய்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு சீமான், வீரமணி உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்:

அந்த வகையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தண்ணீரும் பிஸ்கட்டும் வழங்கி இருக்கிறார் பாடகி சின்மயி. இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, தங்களுடைய குடும்பத்திற்காக வெயில், மழை என்று பார்க்காமல் குப்பையை அள்ளுகிறார். இரவு நேரத்தில் கூட கண் விழித்து கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சின்மயி ஆதரவு:

அதனால் தான் என்னால் முடிந்த சிறு உதவியை செய்தேன். வேலை நிரந்தரமாக வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். அதை கொடுப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் போராடுபவர்களுக்கு ஆதரவாக குரல் ஆவது கொடுக்கலாம். இதில் போராடுவதில் நிறைய பேர் கணவன் துணையில்லாமல் தனியாக குடும்பத்தை நடத்தும் பெண்கள் தான்.

சின்மயி பேட்டி:

வேலை நிரந்தரம் செய்யப்பட்டால் அவர்கள் வாழ்வு கொஞ்சம் நிலையாக இருக்கும். களத்தில் இருக்க முடியவில்லை என்றாலும் வெளியில் இருந்து அவர்களுக்காக குரல் கொடுத்தாவது ஆதரவு கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அதை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே பெண் செய்தியாளர் ஒருவர், வைரமுத்து குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். கோபமடைந்த சின்மயி, இப்ப எதற்கு அவரைப் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்.

https://www.youtube.com/watch?v=2pAlmZ1GG8M

அரசுக்கு வைத்த கோரிக்கை:

வைரமுத்து பத்தி பேச வேண்டுமா? இந்த கேள்வி மூலமாக என்னை டிரிகர் செய்து நான் கோபமாக ஏதாவது சொல்லுவேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்களும் ஒரு பெண் தான். நீங்களே இப்படி கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வைரமுத்து பற்றி என்னிடம் இப்போது இந்த கேள்வி தேவையா? இப்ப என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது, அதை பற்றி பேசுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full