படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர்

By subhashini · 23/5/2026

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான்.

அதன் பின் இவர் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியலில் அருண் ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருந்தாலும் சீக்கிரமாக இந்த சீரியல் முடிந்தது. தற்போது நவீன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற தொடரில் சேது என்ற கதாபாத்திரத்தில் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

நவீன் குறித்த தகவல்:

இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் நிறைய ட்விஸ்ட், பரபரப்பான கதைகளும் என்று சென்று கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் திருமண காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலின் ஹீரோ நவீனுக்கு படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சில தினங்களுக்கு முன்பு வெயிலில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டது.

ஷூட்டிங்கில் நடந்தது:

அப்போது கடுமையான வெயிலின் காரணமாக நடிகர் நவீன் உடலில் ரொம்பவே வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இதனால் அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. சண்டைக் காட்சி முடித்த பிறகு நவீன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு மூச்சு திணறல் குறையவில்லை. இதனால் அவருக்கு உடல்நிலை முடியாமல் போனது. பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், நவீனுக்கு ஆக்சிஜன் உதவி அளித்து இருக்கிறார்கள்.

நவீன் உடல்நிலை:

அதுமட்டுமில்லாமல் நவீன் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் தயாரிப்பு குழுவினர் முக்கியமான திருமண காட்சிகள் எடுத்து முடிக்க வேண்டும் என்பதால் அவரை படபிடிப்பிற்கு வர சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். இதை அடுத்து நவீனுமே மருத்துவமனையில் இருந்து நேரடியாக படபிடிப்பிற்கு சென்றிருக்கிறார். உடல்நிலை சரியில்லாத போது அவர் எபிசோடுகளை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று முழு முயற்சியோடு நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நவீன் செயலை பாராட்டி இருந்தாலும் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full