சர்வதேச விருதை தட்டித் தூக்கிய 'சின்ன மருமகள்' சீரியல் நடிகர் - குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான்.
அதன் பின் நவீன் அவர்கள் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு பின் இவர் விஜய்
டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சின்ன மருமகள்’ சீரியலில் நடித்து வருகிறார். இயக்குனர் மனோஜ் குமார் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நவீன் குமார் மற்றும் ஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நவீன் குறித்த தகவல்:
இந்த சீரியலின் கதைப்படி கதாநாயகி தமிழ் செல்விக்கு பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். அவரை கதாநாயகன் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்க அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் சொல்லுகின்றனர். இவர்களின் திருமணத்திற்கு பிறகு, கதாநாயகி மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்படுவதை நிறைவேற்ற வேண்டும் என்று கதாநாயகன் நினைக்கிறார். இதற்கிடையே இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டங்களும், கனவை நோக்கி போராடும் கதாநாயகி என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சின்ன மருமகள் சீரியல்:
தற்போது சீரியலில் சேது- தமிழ் இருவரும் மனம் மாறி ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுக்கிறார்கள்.
நல்லபடியாக தமிழ் செல்விக்கு வளைகாப்பும் முடிந்து விடுகிறது. பின் தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் ராஜாங்கம் குடும்பத்திற்கு பிரச்சனை தர இருப்பதால் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியல் நாயகன் நவீன் விருது வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.
நவீன் வாங்கிய விருது:
அதாவது, மலேசியாவை சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான தேசம் தொலைக்காட்சி சின்னத்திரையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சின்ன மருமகள் தொடரில் நவீன் குமார் உடைய சிறப்பான நடிப்பை பாராட்டி அவருக்கு சின்னத்திரையின் மக்கள் நாயகன் என்ற சர்வதேச விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதின் மூலம் மலேசியா மண்ணில் மக்கள் நாயகன் விருதை பெறும் முதல் சின்னத்திரை நடிகர் என்ற பெருமை நவீனுக்கு சேரும். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.