சேர்ந்து வாழ மறுக்கும் சேது-தமிழ், அப்பத்தா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 20/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது- தமிழ் இருவரும் ஜோடியாக சேர்ந்து கண்மணி, ஆறுமுகத்தை ஆசிர்வாதம் செய்தார்கள். அதற்குப்பின் கண்மணி, ஆறுமுகம் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். இன்னொரு பக்கம் கொசு தொல்லை தாங்க முடியாமல் ஈஸ்வரியும் அவருடைய மகளும் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். இன்னொரு பக்கம் சேது, என் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. நீ உண்மையை சொல்லவில்லை என்றால் என் தங்கையின் வாழ்க்கை என்னாயிருக்குமோ என்று சொன்னார். அதற்கு தமிழ்ச்செல்வி, கண்மணி என்னை அன்பாகத்தான் பார்க்கிறார்.

அவளுடைய நான் கஷ்டப்பட விட மாட்டேன் என்று சொன்னார். உடனே சேது, என்னிடம் சொல்ல வேண்டியது தானே என்றார். அதற்கு தமிழ்ச்செல்வி நக்கலாக பேசி இருந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா, கண்மணியின் திருமணத்தை பற்றி கேட்டார். தமிழ்செல்வி நடந்த எல்லாத்தையும் சொன்னார். அதற்குப்பின் ஆறுமுகத்திற்கு ராஜாங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லோருமே மரியாதை கொடுத்தார்கள். வேலைக்காரன் என்று பார்க்காமல் தங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆகவே நினைக்கிறார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் ராஜாங்கம், பர்னிச்சர் கடையை இனிமேல் நீங்கள் தான் பார்க்க வேண்டும். போகப்போக உங்களுக்குமற்ற வியாபாரத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம் என்றார். இதை கேட்டு கண்மணி-ஆறுமுகம் சந்தோஷப்பட்டார்கள். அப்பத்தா, இதற்கெல்லாம் காரணம் தமிழ்செல்வி தான். தமிழ் செல்வியால்தான் நம் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்று பெருமையாக பேசி இருந்தார். அதன் பின் கண்மணி-ஆறுமுகத்தை ஹனிமூன் அனுப்பி வைத்தார்கள்.

நேற்று எபிசோட்:

பின் சேதுவை பார்த்த அப்பத்தா, தமிழ்ச்செல்வியை ஏற்றுக்கொள். விவாகரத்து எல்லாம் வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமாக வாழுங்கள் என்றார். அதற்கு சேது, குழந்தை விஷயத்தில் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நான் அவளுடன் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம் என்றார். இன்னொரு பக்கம் ஹோட்டலின் ஓனர், தமிழ் செல்வியை மரியாதையாக நடத்துகிறார். பின் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தமிழ், தங்கி இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்க, அப்பத்தா, வேண்டாம் என்று சொல்லியும் தமிழ் கேட்கவில்லை பணத்தை கொடுத்துவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, சேது- தமிழிடம் பேச வருகிறார். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியால் தான் உன்னுடைய தங்கை வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. அதற்காகவாவது பழசை மறந்து விடு. தமிழ்ச்செல்வியுடன் சேர்ந்து வாழு. விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். இதை கேட்ட சேது, என் தங்கைக்காக தமிழ்செல்வி செய்தது பெரிய விஷயம் தான். அதற்காக நன்றி சொல்கிறேன். வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு பொய் புளுகியவள் கூட சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்ட தமிழ்செல்வி கோபப்பட்டு சேதுவிடும் சண்டை போகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, இனிமேல் நாங்கள் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம். தயவுசெய்து இதை விடுங்கள் அப்பத்தா என்று சொல்லிவிட்டு கிளப்புகிறார். பின் இருவருமே தூங்க போய் விடுகிறார்கள். அதற்கு பின் கருப்பு, தமிழையும் சேதுவையும் சேர்த்து வைக்கணும் என்றால் நீ செத்த பிறகு தான் நடக்கும் என்று சொல்கிறார். இதைக் கேட்ட அப்பத்தா, நான் செத்தால் நடக்குமா? அப்ப நாளை என்ன செய்கிறேன் பார் என்று கடிதம் எழுதுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full