துப்பு துலக்கும் வேலையில் மும்முரமாக செயல்படும் கருப்பு, வசமாக சிக்கிய தாமரை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் செல்வதால் கருப்பு வீட்டிற்கு வந்தார். பின் கருப்பு சேதுக்கிடையே இருக்கும் பிரச்சனையை அறிந்து கொண்ட ராஜாங்கம் சேதுவை வர வைத்து பேசி இருந்தார். பின் சேது- கருப்பு இருவருமே சேர்ந்து விட்டார்கள். அதற்கு பின் சேது, மாப்பிள்ளையை பற்றி ஒவ்வொரு உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால், அதற்கு முன்பே மாப்பிள்ளை அப்பா தன் மகனைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் சேதுவிடம் மாப்பிள்ளை பற்றி எந்த ஒரு தவறான செய்தியும் கிடைக்கவில்லை.
அதற்குப்பின் சேது விசாரிப்பதை அறிந்து கொள்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. பின் சேதுவுக்கு போன் செய்த மாப்பிள்ளை அப்பா, திருமண நேரத்தில் இப்படி செய்யாதீர்கள். எங்களுக்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது என்று சொல்வதால் சேது அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திற்கு போன் செய்த கண்மணி, இன்னும் ஒரு நாளில் எனக்கு கல்யாணம். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று சொன்னார். இதைக் கேட்டு ஆறுமுகம் அதிர்ச்சி ஆனார்.
சின்ன மருமகள் சீரியல்:
ஈஸ்வரி, மாப்பிள்ளை பற்றிய உண்மை வெளியே தெரிந்து விடுமா என்று தன் மகளிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு ஈஸ்வரி மகள், மாப்பிள்ளை நல்லவர் தானே என்று கேட்டார். அதற்கு ஈஸ்வரி, அது தெரியாது. எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று இந்த சம்மந்த்தை ஒத்துக் கொண்டேன் என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை பார்த்த கருப்பன், வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். அதனால் தமிழ் சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து ஓட்டலின் ஓனர் திட்டியதால் தமிழ் வேலைக்கு சென்று விட்டார். பின் தமிழ் செல்வி செய்யும் வேலை பார்த்து கருப்பன் ரொம்பவே வருத்தப்பட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி, கண்மணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப மோசமானவன். அதைப்பற்றி சேதுவிடும் சொன்னேன். ஆனால், உண்மை வெளிவரவில்லை. நாம் தான் கண்மணியின் வாழ்க்கைக்காக உண்மையை கண்டுபிடிக்கணும் என்று சொல்வதால் கருப்பன் ஒத்துக்கொண்டார். இதை எல்லாம் ஒளிந்து கேட்ட தாமரை, தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். அப்போது தாமரை மாப்பிள்ளை பற்றி விசாரித்து நான் நல்ல பெயர் வாங்கணும் என்றார்.
கடைசியில் சேது, ஈஸ்வரியை சந்தித்து மாப்பிள்ளை பற்றி விசாரித்தார். அதற்கு ஈஸ்வரி, ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கருப்பு, மாப்பிள்ளையை பற்றி விசாரிப்பதற்காக அவர்களுடைய ஹோட்டலில் தெரியாத நபர் போர் ரூம் எடுத்து தங்குகிறார். அதே ஹோட்டலுக்கு தாமரையுமே வருகிறார். தாமரையை பார்த்தவுடன் மாப்பிள்ளை நந்தகுமார் நண்பர்கள் இன்னைக்கு நல்ல வேட்டை தான் என்று சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உண்மை தெரியாமல் தாமரையுமே வசமாக ஹோட்டலில் சிக்கி கொள்கிறார். ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருக்கிறார். ஆனால், தாமரைக்கு தெரியாமல் அவர்கள் கேமராவில் வீடியோ எடுக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கருப்பு ஓட்டல் முழுவதுமே ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று தேடிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் கண்மணி, எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா? னக்கு ஆறுமுகம் தாலி கட்டவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்கிறார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் அதற்கான முயற்சியில் தான் இருக்கிறேன். நீ கவலைப்படாதே எல்லோருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்று சொல்கிறார். பின் போன் செய்த தமிழ்ச்செல்வி, நீங்கள் ஓட்டலில் மட்டும் இல்லாமல் வெளியிடத்திலும் விசாரியுங்கள் என்று கருப்புக்கு ஐடியா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.