மருத்துவ கேம்பில் சிறுவன் உயிரை காப்பாற்றினாரா தமிழ்செல்வி? சேது செய்த உதவி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மருத்துவ முகாம் நடக்கும் மலை கிராமத்திற்கு ராஜாங்கம் குடும்பத்தில் சென்று விட்டார்கள். அங்கு மருத்துவ முகாமை பற்றி ராஜாங்கம் நிறைய விஷயங்களை சொன்னார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தின் எதிரி, போஸ் உடன் சேர்ந்து ராஜாங்கத்தை அழிக்க திட்டம் போட்டார். தற்குப்பின் மருத்துவ முகாமில் ராஜங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரத்த தானம் செய்தார்கள். தாமரை, ஈஸ்வரிக்கு விருப்பமில்லை என்றாலும் ரத்த தானம் கொடுத்தார்கள்.
நேற்று எபிசோட்டில் கேம்பில் தமிழ்செல்வி எல்லோருக்கும் பிபி, சுகர் டெஸ்ட் செய்தார். அதற்குப்பின் கேம்ப் நடக்கும் இடத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அங்கு பெரிய பசங்களுக்கு போட்டியாக பெரிய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு போன சேது சிறுவர்களுக்கு சப்போர்ட் செய்து கிரிக்கெட் விளையாடினார். ஆரம்பத்தில் சேது தடுமாறினாலும் ஒரு வழியாக விளையாடி கிரிக்கெட்டில் வெற்றி பெட்ற்றார். இதையெல்லாம் சேது குடும்பத்தினர் பார்த்து கைகட்டி கொண்டாடினார்கள்.
சின்ன மருமகள்:
அதற்கு பின் தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனி, நான் காதலிக்கும் விஷயம் வீட்டிற்கு தெரிந்து விட்டது. அதனால் தான் என் படிப்பை நிறுத்துகிறார்கள் என்று எமோஷனலாக சொல்லி அழுதார். அப்போது தமிழ்ச்செல்வி, எதனால் உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார். அதற்கு ஜெனி, நானும் சக்தியும் வெவ்வேறு மதம், அதோட அவர் ஜாதியை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனை செய்கிறார்கள் என்றார். அந்த சமயம் பார்த்து தமிழில் மொபைலுக்கு சக்தி போன் செய்து ஜெனியிடம் பேசினார். தமிழ் செல்வி தன்னுடைய தோழிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மருத்துவ முகாமில் இருப்பவர்களுக்காக சாப்பாடு எடுத்து வரும் வண்டி ஒரு சின்ன விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பாடு வரவில்லை என்று மருத்துவர்கள் எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது நடந்ததைப் பற்றி அறிந்த அப்பத்தா, நாங்களே சாப்பாட்டை உங்கள் எல்லோருக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்கிறார். பின் அப்பத்தா, சேது, மலர், கண்மணி எல்லோருமே சேர்ந்து சாப்பாடு செய்து மருத்துவ முகாமில் உள்ளவர்களெல்லாம் போடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதை பார்த்து தமிழ் செல்விக்கு சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருமே சேதுவை ரொம்ப பெருமையாக புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த சமயம் பார்த்து மருத்துவ முகாமிற்கு ஒரு குழந்தையை ஆபத்தான கட்டத்தில் பெற்றோர் அழைத்து வருகிறார்கள். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சரியான சிகிச்சை கொடுத்து காப்பாற்றி விடுகிறார்கள். இதனால் தமிழ்செல்வியின் காலில் விழுந்து நன்றி சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் தங்கும் வீட்டிற்கு வேலை ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் எல்லா வசதியையும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.