அடர்ந்த காடு, பீதி கிளம்பும் - ஏற்காடில் நடந்த தித் திக் சூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த 'சின்ன மருமகள்' நாயகன் நவீன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'சின்ன மருமகள்'. இயக்குனர் மனோஜ் குமார் இயக்கி வரும் இந்த சீரியலில் நவீன் குமார் மற்றும் ஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியலின் கதைப்படி கதாநாயகி தமிழ் செல்விக்கு பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். அவரை கதாநாயகன் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்க அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் சொல்லுகின்றனர்.
இவர்களின் திருமணத்திற்கு பிறகு, கதாநாயகி மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்படுவதை நிறைவேற்ற வேண்டும் என்று கதாநாயகன் நினைக்கிறார். இதற்கிடையே இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டங்களும், இவர்களைப் பிரிக்க நினைக்கும் கதாநாயகனின் குடும்பத்தினர் என்பது போல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது சீரியலில் மலை பிரதேசங்களில் நடப்பது போன்ற திரில்லர் காட்சிகள் தான் சென்று கொண்டிருக்கிறது.
சின்ன மருமகள்:
அடர்ந்த காடு, பீதி கிளம்பும் காட்டு விலங்குகளின் சத்தம், நடுங்க வைக்கும் குளிர் போன்ற இடங்களில் சுமார் பத்து நாட்கள் சீரியல் குழுவினர் ஷூட்டிங்கை நடத்திருக்கிறார்கள். தற்போது அந்த அனுபவத்தை சீரியலின் கதாநாயகன் நவீன் பகிர்ந்து இருக்கிறார். அதில், சீரியலின் கதை ஒரு மலைப் பிரதேசக் காட்டுக்குள் ட்ராவல் பண்ண போகுதுன்னு தெரிஞ்சதுமே ஒரு திரில்லான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஏற்காடில் ஷூட்டிங்:
பொதுவாக சீரியல் ஷூட்டிங் சென்னையை விட்டு வெளியே இருக்காது. சம்மர் நேரங்களில் சில தொடர்களை குளிர் பிரதேசங்களில் ஷூட்டிங் செய்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நாங்க நல்ல குளிர் காலத்துல ஏற்காடுக்குக் கிளம்பிட்டோம். ஏப்ரல், மே மாதங்களிலேயே குளிர் அதிகமாக இருக்கும். அப்போ இப்பொழுது குளிர் எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க. பனி பெய்ஞ்சுக்கிட்டு இருந்த ஒரு அதிகாலையில் தான் நாங்க போய் இறங்கினோம்.
திரில்லர் அனுபவம்:
அங்கிருந்த உயரமான மரங்கள், அடர்த்தியா இருந்த காடு, அதுக்குள்ள இருந்து கேட்கிற வன விலங்குகளின் சத்தம், குளிர்ந்த காத்து, ஆர்ப்பரிக்கிற சத்தத்துடன் விழும் நீர்வீழ்ச்சினு ஷூட்டிங்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பார்ப்பதற்கு ஒரு பக்கம் ரம்யமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் திகில், பீதின்னு திரில்லிங்கான அனுபவமாக இருந்தது. பாறையில வழுக்கிற காட்சி, மரத்திலிருந்து விழுகிற மாதிரியான காட்சிகள் எனக்கு தித் திக் அனுபவத்தை தந்தது.
https://www.youtube.com/watch?v=QpD1PWzZSPw
காய்ச்சல் வந்துடுச்சு:
மேலும், அந்த சுற்று சூழலை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இதுவரை என் நடிப்பு கரியர்ல இப்படி ஒரு அனுபவத்தை நான் சந்தித்தது இல்லை. அந்த மாதிரி ஒரு கிளைமேட்ல இருந்ததால எனக்கு காய்ச்சல் வந்துடுச்சு. அட்டைப் பூச்சிகள் கூட கடிச்சது. ஆனாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் யூனிட் பாத்துக்கிட்டாங்க. அதே நேரம் உடலுக்கு சுத்தமான மூலிகைகள் கலந்த காத்து, மனசுக்கு உற்சாகம், தைரியம்னு அடுத்த ஒரு ஆறு மாசத்துக்கு தாங்கும் என்று சீரியல் நடிகர் நவீன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.