ராஜாங்கம் கொடுத்த வாக்குறுதி, அப்பத்தாவிற்கு ஏற்பட்ட விபரீதம் - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது சித்தி, நான் எப்போதும் உனக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று பேசி இருந்தார். ஆனால், தமிழ் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேது, தனக்கு தெரிந்ததை சமைத்தார். தமிழ்ச்செல்வி வாய்க் ருசியாக சமைக்கிறார். இருவருமே தனித்தனியாக தாங்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டார்கள். சேது சமைத்த சாப்பாடு வாயிலேயே வைக்க முடியவில்லை. இதனால் அவர் சாப்பாட்டை ஆர்டர் போட்டார்.
சேது ஆர்டர் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு உடம்பு முடியாமல் போனது. இதனால் சேது அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பின் தமிழ் செல்வி கல்லூரிக்கு கிளம்பினார். ஆனால், சேது முடியாது என்று மறுத்தார். உடனே தமிழ்செல்வி, வக்கீலுக்கு போன் செய்ய, அவர் படிக்க அனுமதிக்கவில்லை என்றால் சேது மீது கேஸ் போடலாம் என்றார். அதனால் சேது எதுவும் பேசவில்லை. தமிழ்செல்வி கல்லூரி சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேது வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று பிரியாணி சமைத்து வைக்க, இதை பார்த்த அப்பத்தா பிரியாணியில் உப்பு, காரத்தை கொட்டி வைத்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
சேது பிரியாணி எடுத்து சாப்பிட்ட, காரம் தாங்க முடியாமல் கத்தினார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா வெளியே சிரித்துக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய தோழியுடன் கல்லூரியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வியின் பள்ளி நண்பர், ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். உடனே தமிழ்ச்செல்வி, உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா? என்று கேட்டவுடன் அவர், சிரித்துக் கொண்டு சம்மதித்தார். இன்னொரு பக்கம் சேதி என்ன செய்வது என்று புரியாமல் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது சேதுவின் அத்தை வேண்டும் என்று தமிழ்செல்வியை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்டு சேது கோபப்பட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த தமிழ்செல்வியின் பள்ளி தோழன், டெம்போவில் ஏற சொன்னார். தமிழ் செல்வி, அவருடைய தோழியுமே ஏறி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஆறுமுகம் தன் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடல் போனார். மருத்துவர்கள், அவருடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. சீக்கிரம் ஆப்ரேஷன் செய்யணும். லட்ச கணக்கில் பணம் தேவை என்பதால் ஆறுமுகத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதை அறிந்த ராஜாங்கத்தின் மகள் தன்னுடைய அப்பாவிடம் ஆறுமுகம் அக்காவின் ஆபரேஷனுக்கு உதவி செய்ய சொன்னார்..
சீரியல் ட்ராக்:
பின் சேது வீட்டிலேயே வைத்துக் குடித்தார். இதை பார்த்து தமிழ் செல்வி, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு சேது, நான் அப்படிதான் செய்வேன். என் விருப்பம் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு பின் தமிழ் செல்விக்கு உடம்பு முடியாமல் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதை பார்த்த சேது பதறி அடித்துக்கொண்டு தமிழ்செல்வியை தன் மடியில் வைத்து எழுப்பினார். ஆனால், தமிழ்செல்வி எழவில்லை.
https://www.youtube.com/watch?v=gnTaIWW4UNg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி படிக்கும் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக ராஜாங்கம் சென்றிருக்கிறார். அப்போது ராஜாங்கம், தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு அடுத்த வருடம் கட்டண பீஸ் முழுவதும் நானே தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் கல்லூரியில் உள்ள மாணவர்கள் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தின் அம்மா நெஞ்சுவலி வந்து கீழே மயங்கி விழுந்து விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள்.