போஸ் சதி வலையில் சிக்கிய ஆறுமுகம், தமிழ் செல்வியால் கடுப்பான சேது - சின்ன மருமகள்

By subhashini · 15/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரிக்கு போன் செய்த போஸ், நான் ராஜாங்கத்தை அபழிவாங்காமல் விடமாட்டேன். ஆறுமுகத்தை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ராஜாங்கத்திடம் அப்பத்தா, தமிழுக்கு நடந்ததை பற்றி சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தமிழும் சாப்பிடுவதற்காக போனார். ஆனால், அவரால் போட முடியவில்லை.

தமிழ்ச்செல்வியால் நடக்க முடியாதால் சேது அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார். இதனால் தமிழ்ச்செல்வி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டார். இன்னொரு பக்கம் கட்சி தலைவரின் மனைவி ராஜாங்கம் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர், பெண்களின் நலனுக்காக சில திட்டங்களை கட்சித் தலைவர் கொண்டு வந்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தமிழ்ச்செல்வியை கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

இதை கேட்டு ராஜங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருந்தார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருந்தார். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசினார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னை கல்லூரிக்கு அழைத்து செல்ல சேது ஒத்துக் கொண்டதால் தமிழ்ச்செல்வி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் வேலையை முடித்து வந்த ஆறுமுகத்திடம் போஸ் பேசுகிறார். பின் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போதே சரக்கு அடிக்க போஸ் ஆறுமுகத்தை கூப்பிடுகிறார். ஆறுமுகம் வேண்டாம் என்று தடுத்துமே போஸ் கேட்கவில்லை. வழி இல்லாமல் ஆறுமுகம்- போஸ் குடிக்கிறார்கள். தன் வழிக்கு ஆறுமுகத்தை கொண்டு வர வேண்டும் என்று போஸ் தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார். அதற்குப்பின் வீட்டில் கண்மணி ஆறுமுகத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது ஆறுமுகம் குடித்து வந்ததை அறிந்த கண்மணி ரொம்பவே கோபப்பட்டு திட்டுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார். மழை வந்ததால் சேது உள்ளே தூங்குகிறார். லைட் எரிவதால் சேது ஆப் செய்து விடுகிறார். உடனே தமிழ்ச்செல்வி சத்தமாக கத்தி கத்தி படிக்கிறார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி தேர்வு எழுதப் போவதால் youtube சேனல் வந்து வீடியோ எடுக்கிறார்கள். அப்போது அப்பத்தா வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full